அகில இந்திய கிரிக்கெட் போட்டி பைனலில் தமிழகம் - பீஹார் பலப்பரீட்சை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சென்னை:மெரினாவில் நடந்து வரும் அகில இந்திய கிரிக்கெட்டில், தமிழகம் மற்றும் பீஹார் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.தமிழ்நாடு கிரிக்கெட் பெடரேஷன் சார்பில், 39வது அகில இந்திய அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, சென்னை மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் அரையிறுதியில், கர்நாடகா மற்றும் பீஹார் அணிகள் மோதின. முதல் பேட்டிங்
அகில இந்திய கிரிக்கெட் போட்டி பைனலில் தமிழகம் - பீஹார் பலப்பரீட்சை

சென்னை:மெரினாவில் நடந்து வரும் அகில இந்திய கிரிக்கெட்டில், தமிழகம் மற்றும் பீஹார் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.
தமிழ்நாடு கிரிக்கெட் பெடரேஷன் சார்பில், 39வது அகில இந்திய அளவிலான, 17 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, சென்னை மெரினா கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வருகிறது.
முதல் அரையிறுதியில், கர்நாடகா மற்றும் பீஹார் அணிகள் மோதின. முதல் பேட்டிங் செய்த கர்நாடகா அணி, 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து, 123 ரன்கள் எடுத்தது.
அடுத்து களமிறங்கிய பீஹார் அணி, 18.1 ஓவர்களில், நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 126 ரன்கள் எடுத்து, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன், இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றது.
மற்றொரு அரையிறுதியில், தமிழகம் மற்றும் தெலுங்கானா அணிகள் மோதின. முதலில் விளையாடிய தமிழகம் அணி, 20 ஓவர்களில், மூன்று விக்கெட்டுகளை இழந்து, 192 ரன்கள் எடுத்தது.அடுத்து பேட்டிங் செய்த தெலுங்கானா அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து, 155 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, 37 ரன்கள் வித்தியாசத்தில் தமிழகம் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து, தமிழகம் மற்றும் பீஹார் அணிகள் இறுதிப் போட்டியில் மோத உள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X