வெள்ளம், மரங்கள் முறிவால் பழங்குடி கிராமத்தில் பாதிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கூடலுார்:கூடலுார் தொடர் மழையில், பழங்குடியின கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலுாரில், நேற்று முன்தினம் இரவு பல பகுதிகளில் கன மழை பெய்தது. தொரப்பள்ளி ஆற்றை ஒட்டிய இரு வயல், மொளப்பள்ளி பழங்குடியினர் கிராமங்களில், மழை வெள்ளம் சூழ்ந்தது.கூடலுார் வருவாய் ஆய்வாளர்கள் சகீர், உமா, வி.ஏ.ஓ., மோகன்ராஜ், ஊழியர்கள்
வெள்ளம், மரங்கள் முறிவால் பழங்குடி கிராமத்தில் பாதிப்பு

கூடலுார்:கூடலுார் தொடர் மழையில், பழங்குடியின கிராமங்களை வெள்ளம் சூழ்ந்ததால், முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலுாரில், நேற்று முன்தினம் இரவு பல பகுதிகளில் கன மழை பெய்தது. தொரப்பள்ளி ஆற்றை ஒட்டிய இரு வயல், மொளப்பள்ளி பழங்குடியினர் கிராமங்களில், மழை வெள்ளம் சூழ்ந்தது.கூடலுார் வருவாய் ஆய்வாளர்கள் சகீர், உமா, வி.ஏ.ஓ., மோகன்ராஜ், ஊழியர்கள் இரவு, 11:30 மணிக்கு, அப்பகுதியில் வசிக்கும், 72 பேரை மீட்டு, தொரப்பள்ளி அரசுப் பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரணமுகாமில் தங்க வைத்தனர்.
கூடலுார் ஊசிமலை, மார்தோமா நகர், முதுமலை தொரப்பள்ளி உட்பட பல்வேறு பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதித்தது; மின் தடை ஏற்பட்டது. தேசிய நெடுஞ்சாலை மற்றும் தீயணைப்பு துறையினர், போலீசார், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மரங்களை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். மழை பாதித்த, தொரப்பள்ளி, ஆமைகுளம் உட்பட பல பகுதிகளை, வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X