சரியான கட்டமைப்பு வசதி இல்லாத ஓசூர்:ஒரு நாள் மழைக்கே மிதக்கும் மாநகராட்சி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில் சரியான கட்டமைப்பு வசதி இல்லாததால், ஒரு நாள் மழைக்கே நகரம் மிதந்து வருகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி வளர்ந்து வரும் தொழில் நகரம். மொத்தம், 45 வார்டுகள் உள்ளன. நல்லுார், தொரப்பள்ளி அக்ரஹாரம் உட்பட மேலும் சில பஞ்.,க்களை மாநகராட்சியுடன் இணைத்து, அதன் பரப்பை அதிகரித்து, ஆண்டு வருவாயை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.ஆனால்,

ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில் சரியான கட்டமைப்பு வசதி இல்லாததால், ஒரு நாள் மழைக்கே நகரம் மிதந்து வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி வளர்ந்து வரும் தொழில் நகரம். மொத்தம், 45 வார்டுகள் உள்ளன. நல்லுார், தொரப்பள்ளி அக்ரஹாரம் உட்பட மேலும் சில பஞ்.,க்களை மாநகராட்சியுடன் இணைத்து, அதன் பரப்பை அதிகரித்து, ஆண்டு வருவாயை உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால், மாநகராட்சியில் ஏற்கனவே உள்ள, 45 வார்டுகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற அடிப்படை கட்டமைப்பு வசதி இல்லை.தொழில் வளம் உள்ளதால், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வந்து ஏராளமானோர் குடியேறியுள்ளனர்.அடிப்படை வசதி செய்ய தாமதிக்கும் மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வரியை உயர்த்தியது; விரைவில் சொத்து வரியை உயர்த்த உள்ளது.
மாநகராட்சி என்றால் மண் சாலை இருக்க கூடாது. ஆனால், பல வார்டுகளின் தெருக்கள் மண் சாலைகளாக தான் காட்சியளிக்கின்றன. அதுமட்டுமின்றி, சாலையுடன் கூடிய சாக்கடை கால்வாய் வசதி இல்லை; மேலும், பல பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் இல்லை.கால்வாய் உள்ள இடங்களிலும், சரியாக சுத்தம் செய்யாத காரணத்தால், அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் வெளியேறுவதில்லை. மழைக்காலங்களில் கழிவு நீர் கால்வாயில் மழை நீர் வெளியேற முடியாமல், சாலைகளில் தேங்கி விடுகிறது.
மேலும், சாக்கடை கால்வாய் பல இடங்களில் முழுமை பெறாமல் உள்ளது. ஓசூர் மாநகராட்சியில், கவுன்சிலர்கள் மற்றும் மாநகர மேயர், துணை மேயர் பதவியேற்று, ஐந்து மாதங்கள் முடிந்து விட்டன.ஆனால், சரியான கட்டமைப்பு வசதியை மேம்படுத்த, கவுன்சிலர்களை அழைத்து அவர்களது ஆலோசனை கேட்க ஒரு கூட்டம் கூட தனியாக நடத்தப்படவில்லை.
கடந்த, ஐந்து மாதங்களில் ஒருமுறை கன மழை பெய்து, ஓசூர் நகரில் பல இடங்கள் மழை நீர் தேங்கியது. அதிலிருந்து மாநகராட்சி பாடம் படிக்கவில்லை.அதன் பின் கூட சரியான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை. கடந்த, 3ம் தேதி, 57.6 மி.மீ., மழை கொட்டி தீர்த்த நிலையில், ஓசூர் பஸ் ஸ்டாண்ட் மழை நீரில் மிதந்தது.பஸ் ஸ்டாண்ட் முன் உள்ள சாலையில், மழைநீர் வடிய வழியில்லாமல், அளவுக்கு அதிகமாக தண்ணீர் தேங்கியது.
தாலுகா அலுவலக சாலை, ராயக்கோட்டை சாலை சந்திப்பு, கே.சி.சி.,நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர், சிவக்குமார் நகர், பூஞ்சோலை நகர், நாதன் நகர், முனீஸ்வரர் நகர், வசந்த் நகர், ராஜீவ் நகர், 7 ஹில்ஸ் நகர் உட்பட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.சரியான கால்வாய் வசதி இல்லாதது மற்றும் கால்வாய் சுத்தம் செய்யப்படாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளது தான் இதற்கு காரணம்.
மாநகராட்சி பகுதியில்மழை காலங்களில் அடைப்பை சரி செய்ய போதிய 'பொக்லைன்' வாகனம் இல்லை. அதை புதிதாக வாங்குவதாக கூறி, காலம் தான் கடந்து வருகிறது. இப்போதைய தவறில்இருந்து மாநகராட்சி பாடம் படிக்காவிட்டால், அடுத்த மழைக் காலத்திலும் ஓசூர் நகரம் வெள்ளத்தில் மிதக்கும் என்பதே உண்மை என, சமூக ஆர்வலர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X