கெலவரப்பள்ளி அணையில் சுற்றுலா பயணியருக்கு தடை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றில் நேற்று, 2,020 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால், அணைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,370 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், நேற்று காலை நீர்வரத்து, 2,209 கன

ஓசூர்:ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து தென் பெண்ணை ஆற்றில் நேற்று, 2,020 கன அடி நீர் திறந்து விடப்பட்டதால், வெள்ளம் கரை புரண்டு ஓடியது. அதனால், அணைக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 1,370 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால், நேற்று காலை நீர்வரத்து, 2,209 கன அடியாக அதிகரித்தது.அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 42.64 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில், 2,020 கன அடி நீர் திறந்து விடப்பட்டது.
அணையில் உள்ள, ஏழு மதகுகளும் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டதால், ஆற்றில் ரசாயன நுரையுடன் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், ஆற்றங்கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.கெலவரப்பள்ளி அணையை சுற்றி பார்க்க வருவோருக்கு தடை விதிக்கப்பட்டது; அணைக்கு செல்லும் கேட் மூடப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X