நிர்மலா சீதாராமன் - தியாகராஜன் டில்லியில் நேரில் சந்தித்து பேச்சு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், டில்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியைமச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.பார்லி.,யில் நடைபெற்ற விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின்போது, தி.மு.க., - எம்.பி.,க்களின் விமர்சனத்திற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு

மதுரையில், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், டில்லியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, தமிழக நிதியைமச்சர் பழனிவேல் தியாகராஜன் நேரில் சந்தித்து பேசியுள்ளார்.
பார்லி.,யில் நடைபெற்ற விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தின்போது, தி.மு.க., - எம்.பி.,க்களின் விமர்சனத்திற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்த பதில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதற்கு பதிலடியாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சுமத்திய குற்றச்சாட்டுகளால் இருதரப்புக்கும் இடையே உரசல்கள் அதிகரித்தன.
இந்நிலையில்தான், டில்லி வந்த பழனிவேல் தியாகராஜன், அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.பின், மத்திய நிதித்துறை செயலாளர் சோமநாதனையும், பழனிவேல் தியாகராஜன் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம் உடன் இருந்தார்.
இம்மாத இறுதியில், மதுரையில் 48 வது, ஜி.எஸ்.டி.,கவுன்சில் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், இதற்கான ஏற்பாடுகள் மற்றும் தேதி குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
- நமது டில்லி நிருபர் -


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X