முல்லைப் பெரியாறில் மழை: ஸ்டாலினுக்கு பினராயி கடிதம்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-'முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவை விட, கூடுதல் நீரை வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கேரள மாநிலத்தில், கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், இடுக்கி உட்பட பல

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-'முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், கன மழை பெய்துள்ளதால், அணைக்கு வரும் நீரின் அளவை விட, கூடுதல் நீரை வெளியேற்ற வேண்டும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதி உள்ளார்.



latest tamil news


கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:கேரள மாநிலத்தில், கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம், இடுக்கி உட்பட பல மாவட்டங்களுக்கு, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம், 136 அடியை நெருங்கி உள்ளது. அணைக்கு அதிகப்படியான நீர் வரத்து உள்ளதால், அணை நீர் மட்டம் திடீரென உயர வாய்ப்புள்ளது.


latest tamil news


எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக குறைக்க வேண்டும். நீர் வரத்தை விட அதிகப்படியான தண்ணீரை வெளியேற்ற, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.ஏனெனில், முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பு பகுதிகளில், அதிக மழை பெய்து உள்ளது.

மேலும், முல்லைப் பெரியாறு அணை மதகுகளை திறப்பதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், கேரள அரசுக்கு தெரியப்படுத்தவும். அப்போது தான் அணையின் கீழ் பகுதியில் உள்ள மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
06-ஆக-202213:10:29 IST Report Abuse
krish பினராயி விஜயன் அவர்களே, இந்த மாதிரி பேரிடர் காலங்களில் முன்னெச்சரிக்கை ஒன்றே தேவை. முன்னறிவிப்பு தேவை இல்லை. தமிழக அரசை உங்கள் அரசின் -இடரை எதிர்கொள்ளத்தேவையான முன்னேற்பாடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கமுடியாத இயலாமை,கையாலாகாத்தனத்திற்கு தமிழக அரசை பலியாடாக்க துணியாதீர்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06-ஆக-202212:49:00 IST Report Abuse
Ramesh Sargam ஒரு குடியரசு நாட்டில் உள்ள பல மாநிலங்கு இடையே இந்த நதிநீர் பிரச்சினை என்பது இருக்கவே கூடாது. இதுபோன்று வேறு எந்த நாட்டிலும் நதிகளினால், ஆறுகளினால் அங்குள்ள மாநிலங்களிடையே பிரச்சினை இருப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. மழை அதிகம் பெய்து நீர் வரத்து அதிகம் இருந்தாலும் பிரச்சினை. மழையே பெய்யாவிட்டால் வேறு விதமான பிரச்சினை. நாட்டில் உள்ள அனைத்து நதிகளும், ஆறுகளும் மொத்த நாட்டுமக்களுக்கு பயன்படும் விதத்தில், மாநிலங்களுக்கு இடையே ஒரு புரிதல் இருக்கவேண்டும். அல்லது மத்திய அரசு அல்லது நீதிமன்ற அறிவுறுத்தலுக்கு கட்டுப்பட்டால், இந்த மாதிரி பிரச்சினைகள் வர சாத்தியமில்லை. நதிகளை வைத்து அரசியல்செய்வதை மாநிலங்கள் கைவிடவேண்டும்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
06-ஆக-202206:26:30 IST Report Abuse
வெகுளி ஸ்டாலின் ஒரு கணித மேதை என்பதை அறியாமல் பினராயி கடிதம் எழுதி விட்டார்.... ஹிஹி....நீர் வரத்து, அணையின் கொள்ளளவு எல்லாம் ஸ்டாலின் கணக்கிட்டு சொன்னால் சேட்டன் தலை தெறித்து ஓடுவார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X