மின் வாரிய தடகளம்; ஊழியர்கள் உற்சாகம்!

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கான மாநில அளவிலான தடகளப்போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது.மின்வாரிய ஊழியர்களுக்கு மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்வானவர்களுக்கு, கோவையில், மாநில அளவிலான வாலிபால், கபடி, கிரிக்கெட், கூடைப்பந்து, பூப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், 1ம் தேதி முதல்நடந்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மண்டலங்களுக்கு இடையேயான
மின் வாரிய தடகளம்; ஊழியர்கள் உற்சாகம்!

கோவை:தமிழக மின்வாரிய ஊழியர்களுக்கான மாநில அளவிலான தடகளப்போட்டி, நேரு ஸ்டேடியத்தில் நேற்று துவங்கியது.மின்வாரிய ஊழியர்களுக்கு மண்டல அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் தேர்வானவர்களுக்கு, கோவையில், மாநில அளவிலான வாலிபால், கபடி, கிரிக்கெட், கூடைப்பந்து, பூப்பந்து, தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள், 1ம் தேதி முதல்நடந்து வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, மண்டலங்களுக்கு இடையேயான தடகளப்போட்டிகள் நேற்று துவங்கின; மின்வாரிய இயக்குனர் (நிதி) சுந்தரவதனம் துவக்கி வைத்தார். பகிர்மான இயக்குனர் சிவலிங்கராஜன், கோவை மின் பகிர்மான தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.போட்டியில், சென்னை, கோவை, மதுரை, வேலுார், திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம் மற்றும் ஈரோடு உள்ளிட்ட மண்டலங்களில் இருந்து, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். நேற்று நடந்த, 5000மீ., ஓட்டத்தில் கோவை மண்டலத்தை சேர்ந்த பாபு முதலிடம்; விழுப்புரத்தை சேர்ந்த தமிழரசன் இரண்டாமிடம்; நீளம் தாண்டுதலில், விழுப்புரம் விஜயகுமார் முதலிடம், திருச்சி பாலமுருகன் இரண்டாமிடம்; 800மீ., ஓட்டத்தில் திருச்சி சுந்தர் முதலிடம், திருநெல்வேலி சதீஷ் இரண்டாமிடம்; 110மீ., தொடர் ஓட்டத்தில் மதுரையை சேர்ந்த சிவகணேஷ் முதலிடம், ரித்தின் இரண்டாமிடம், குண்டு எறிதல் போட்டியில், ஈரோடு மண்டல முகேஷ் முதலிடம் மற்றும் சென்னை தங்கப்பெருமாள் இரண்டாமிடம் பிடித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X