பல்லடம்:பல்லடம் சிறைச்சாலையில் அடிக்கப்பட்ட வர்ணம், இரண்டே வாரத்தில் கரைந்தது.பல்லடம், மங்கலம் ரோட்டில், 141 ஆண்டுகள் பழமை வாய்ந்த கிளைச்சிறை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இச்சிறைச்சாலையில், 20க்கும் மேற்பட்ட கைதிகள் பாதுகாப்பில் உள்ளனர். கண்காணிப்பாளர் உட்பட, ஐந்துக்கும் மேற்பட்ட காவலர்கள் இங்கு பணியில் உள்ளனர்.கடந்த 17 ஆண்டுகளாக திறக்கப்படாமல் பயனற்றுக் கிடந்த இக்கிளை சிறை, 2021ல் திறப்பு விழா செய்யப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன், சிறைத்துறை அதிகாரிகள் இங்கு ஆய்வு மேற்கொள்ள வந்தனர். ஆய்வு பணியை கருத்தில் கொண்டு, அவசரகதியில் சுற்றுச்சுவருக்கு வர்ணம் பூசும் பணி நடந்தது. முன் பக்கம் மட்டுமே வர்ணம் பூசப்பட்ட நிலையில், மற்ற மூன்று பகுதிகளும் பழையபடியே விடப்பட்டன.முன் பக்கத்தில் அடிக்கப்பட்ட வர்ணம், இரண்டே வாரங்களில் கரைய துவங்கியுள்ளது.சுவர்களில் வர்ணம் அடிப்பதற்கு முன், பழைய வர்ணங்களை சுரண்டி எடுத்தபின் புதிய வர்ணம் தீட்டும் பணி கொள்ளப்படுவது வழக்கம். ஆனால், அவசர கதியில் அரைகுறையாக மேற்கொள்ளப்பட்ட பணியால், இரண்டே வாரங்களில், சுற்றுச்சுவரின் வர்ணங்கள் கரைந்து, சுவர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. மேலும், வர்ணம் பூசும் பணிக்காக செலவிடப்பட்ட தொகையும் வீணாகியுள்ளது.