தியாகம் விளைந்த திருப்பூர் மண்ணில் சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் தேசமே உயிர் சுவாசம்!'தினமலர்' நடத்தும் நிகழ்ச்சிக்கு நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்து திரண்டு வாரீர்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், வரும் 14ம் தேதி, 'தின மலர்' நாளிதழ் சார்பில், சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்து பல்லாயிரக்கணக்கானோர் திரள வேண்டும்.இன்னும் ஒன்பதே நாட்கள் தான்.... சமூக வளைதளங்களில் முகப்பு படங்களை மாற்றினால் போதுமா? 75வது சுதந்திர தினத்தை உணர்வுபூர்வமாக கொண்டாட வேண்டாமா? ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்தில்
தியாகம் விளைந்த திருப்பூர் மண்ணில் சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் தேசமே உயிர் சுவாசம்!'தினமலர்' நடத்தும் நிகழ்ச்சிக்கு நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்து திரண்டு வாரீர்

திருப்பூர்:திருப்பூரில், வரும் 14ம் தேதி, 'தின மலர்' நாளிதழ் சார்பில், சுதந்திர தின பவள விழா மெல்லோட்டம் நடக்கிறது. இதில் பங்கேற்க நாட்டுப்பற்றை நெஞ்சில் சுமந்து பல்லாயிரக்கணக்கானோர் திரள வேண்டும்.இன்னும் ஒன்பதே நாட்கள் தான்.... சமூக வளைதளங்களில் முகப்பு படங்களை மாற்றினால் போதுமா? 75வது சுதந்திர தினத்தை உணர்வுபூர்வமாக கொண்டாட வேண்டாமா? ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்தில் கலந்துள்ள தேசப்பற்றையும், சுதந்திர உணர்வையும் வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்பை, 'தினமலர்' வழங்க காத்திருக்கிறது.
தேசப்பற்றை நெஞ்சில் நாளும் தாங்கி வெளியாகும், 'தினமலர்' நாளிதழ் சார்பில், பவள விழா சுதந்திர தின மெல்லோட்டம் நம்ம திருப்பூரில் நடக்கிறது. நம்மில் இரண்டற கலந்துள்ள நாட்டுப்பற்றை வெளிக்காட்ட, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பின்னலாடை தொழில் துறையினர், தன்னார்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சேவை அமைப்பினர், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அலுவலர்கள், ஊழியர்கள் என, அனைத்து தரப்பினருக்கும்இது ஓர் அரிய வாய்ப்பாக அமையும்.கொடி காத்து, உதிரம் சிந்தி உயிர்நீத்த தியாகி குமரனின் தியாகம் விளைந்த திருப்பூர் மண்ணில் வரும் 14ம் தேதி 'தினமலர்' நடத்தும் மெல்லோட்டம், கலெக்டர் அலுவலகத்தில் காலை, 7:00 மணிக்கு துவங்கி, நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவடைகிறது.தேசப்பற்றை பறைசாற்ற நமக்கு கிடைத்துள்ள இந்த அரிய வாய்ப்பை தவறவிடாமல், அணி அணியாக பங்கேற்று வரலாற்றில் இடம் பிடிக்க அணி திரள்வோம் வாருங்கள்!

இதை மட்டும் செய்யுங்க!
பங்கேற்கும் அமைப்பினர், பள்ளி மாணவர்கள் தேச தலைவர்கள் வேடமிட்டும், இசைக்கருவிகளை, வாசித்து கொண்டும் வரலாம். இசைக்குழு, பேண்ட் வாத்தியத்துடன், மாணவ, மாணவியர் தங்கள் பள்ளி, கல்லுாரி சீருடையிலும் பங்கேற்கலாம்.தாங்கள் சார்ந்த அமைப்பு அல்லது நிறுவனங்களின் பெயர் தாங்கிய பேனரை கொண்டு வர வேண்டும். குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உட்பட எந்த அமைப்பினரும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பிக்கலாம். பாரம்பரிய நாட்டுப்புற இசை, நாட்டிய கலைக்குழுக்கள் தங்கள் கலைகள் மூலம் தேசப்பற்றை வெளிக்காட்ட விருப்பமா? தாராளமாக வாங்க!

முன்பதிவுக்கு...
மெல்லோட்டத்திதல் பங்கேற்கும் அமைப்பினர், தங்கள் அமைப்பின் பெயர், எவ்வளவு பேர் பங்கேற்கின்றனர், மொபைல் போன் எண், இ-மெயில் ஆகிய விவரங்களை, 98940 09314, 95666 57023 ஆகிய எண்களில் பதிவு செய்ய வேண்டும். பள்ளி, கல்லுாரி நிர்வாகத்தினர், அமைப்பினர் தங்கள் பெயர், மொபைல் எண், இமெயில் முகவரி ஆகியவற்றை காலை, 9:30 முதல், மாலை, 6:00 மணிக்குள், பதிவு செய்யலாம். பதிவு செய்யப்படும் அமைப்பின் பெயர், ‛தினமலர்' நாளிதழில் பிரசுரிக்கப்படும்.

மறக்க முடியுமா!

1932 ஜன., 10, காலை, 9:00 மணி. இந்திய திருநாட்டின் விடுதலைக்காக, திருப்பூரில் கொடியுடன் போராடியவர்கள் மீது 30 போலீசார் கடும் தடியடி நடத்த, மண்டை உடைந்து மயக்கமடைந்து கீழே சாய்ந்தபோதும், குமரன் கொடியை விடவில்லை.அவரது மாபெரும் தியாகத்தை போற்றும் வகையில், தியாகி திருப்பூர் குமரன் அடிபட்ட நினைவிடம், 1997, ஆக.,15ல் சீரமைக்கபட்டது. அதனை கவுரவிக்க, 'தினமலர்' சார்பில், பிரம்மாண்ட அளவில், 'சுதந்திர பொன்விழா ஓட்டம்' நடத்தியது.அதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்களின் தேசபக்தியை மெய்ப்பித்தனர். திருப்பூர் உள்ள அத்தனை சேவை அமைப்புகள், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சியை, மறக்காமல், 14ம் தேதி நடக்கவுள்ள பவளவிழா மெல்லோட்டத்தில் நிகழ்த்தி காட்டுவோமா!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X