ஆடி வெள்ளி, வரலட்சுமி நோன்பு கோலாகலம்!

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று, வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட்டதால், கோவில்களில், கண்ணாடி வளையல் அலங்காரத்தில் அம்மன் ஜொலித்தார்.ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், வரலட்சுமி நோன்பு என, தொடர்ந்து விழாக்கள் நடப்பதால், திருப்பூர் நகரில் உள்ள அம்மன் கோவில்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன. மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, வரலட்சுமி வழிபாடும் நடந்தது.சுமங்கலி பெண்கள் விரதம்

திருப்பூர்:ஆடி வெள்ளிக்கிழமையான நேற்று, வரலட்சுமி நோன்பு கொண்டாடப்பட்டதால், கோவில்களில், கண்ணாடி வளையல் அலங்காரத்தில் அம்மன் ஜொலித்தார்.ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், வரலட்சுமி நோன்பு என, தொடர்ந்து விழாக்கள் நடப்பதால், திருப்பூர் நகரில் உள்ள அம்மன் கோவில்களும் விழாக்கோலம் பூண்டுள்ளன. மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, வரலட்சுமி வழிபாடும் நடந்தது.சுமங்கலி பெண்கள் விரதம் இருந்து, அம்மன் கோவில்களுக்கு, மஞ்சள் சரடு, கண்ணாடி வளையல்கள், மல்லிகை பூ, வெற்றி, பாக்கு, மஞ்சள் - குங்குமம் ஆகியவற்றை வழங்கினர். பக்தர்கள் அளித்த கண்ணாடி வளையல்களால் அம்மனுக்கு அலங்காரம் நடந்தது.வரலட்சுமி நோன்பையொட்டி, பெண்களுக்கு, மஞ்சள் சரடு, எலுமிச்சம் பழம், பூ, மஞ்சள் - குங்குமம் பிரசாதமாக வழங்கப்பட்டது. வழக்கம்போல், கேழ்வரகு கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது.வாலிபாளையம் மாகாளியம்மன் - வாராகி அலங்காரம், ராக்கியாபாளையம் பட்டத்தரசி அம்மன்- காய்கனி அலங்காரம், போலீஸ் லைன் மாரியம்மன் கோவிலில், - வளையல் அலங்காரம், புதுராமகிருஷ்ணாபுரம் சவுடேஸ்வரி கோவில் - வளையல் அலங்காரம்;கருவம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், முத்தங்கி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தனர். கொடிகம்பம் கவுமாரியம்மன் கோவிலில், இரண்டு லட்சம் ரூபாய் நோட்டுகளால், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.பக்தர்கள் வேப்பிலை மாலை, எலுமிச்சம்பழம் மாலை சாற்றியும், விளக்கு ஏற்றி வைத்தும், பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X