பொய் வழக்கு பதிவு; ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு:மனித உரிமை ஆணையம் உத்தரவு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:மனித உரிமை ஆணைய உத்தரவுப்படி, சமூக ஆர்வலருக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கான நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.பல்லடம் தாலுகா, வி.கள்ளிப்பாளையத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் அருண், 2012ம் ஆண்டில், பொய் வழக்கு பதிவு செய்ததாக, அவிநாசிபாளையம் முன்னாள் இன்ஸ்பெக்டர் தன்னாசி பாண்டியன் மீது, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.இதுதொடர்பான விசாரணை முடிந்து, தீர்ப்பு
பொய் வழக்கு பதிவு; ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு:மனித உரிமை ஆணையம் உத்தரவு

திருப்பூர்:மனித உரிமை ஆணைய உத்தரவுப்படி, சமூக ஆர்வலருக்கு, 50 ஆயிரம் ரூபாய்க்கான நஷ்ட ஈடு வழங்கப்பட்டது.பல்லடம் தாலுகா, வி.கள்ளிப்பாளையத்தை சேர்ந்த, சமூக ஆர்வலர் அருண், 2012ம் ஆண்டில், பொய் வழக்கு பதிவு செய்ததாக, அவிநாசிபாளையம் முன்னாள் இன்ஸ்பெக்டர் தன்னாசி பாண்டியன் மீது, தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.இதுதொடர்பான விசாரணை முடிந்து, தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு, 50 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டுமென, தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.டி.ஜி.பி., சைலேந்திர பாபு உத்தரவுப்படி, திருப்பூர் எஸ்.பி., செஷாங் சாய் நேற்று, நஷ்டஈடு தொகைக்கான காசோலையை வழங்கினார்.சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை, சமூக ஆர்வலர் அருண் ஆகியோர், பெற்றுக்கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X