மழையால் கைவிடப்பட்ட போட்டி:சந்தீப்பின் 7 விக்கெட் வீணாகியது!

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:செங்கல்பட்டு மற்றும் திருப்பத்துார் இடையே நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டி, மழையால் பாதியில் கைவிடப்பட்டதால், சந்தீப் வீழ்த்திய ஏழு விக்கெட்டுகள் வீணாகியது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பி.ஆர்.தேவர் கோப்பைக்கான, மாநில அளவிலான, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, முதல் சுற்று ஆட்டம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. 'இ'
மழையால் கைவிடப்பட்ட போட்டி:சந்தீப்பின் 7 விக்கெட் வீணாகியது!

கோவை:செங்கல்பட்டு மற்றும் திருப்பத்துார் இடையே நடந்த ஜூனியர் கிரிக்கெட் போட்டி, மழையால் பாதியில் கைவிடப்பட்டதால், சந்தீப் வீழ்த்திய ஏழு விக்கெட்டுகள் வீணாகியது.தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில், பி.ஆர்.தேவர் கோப்பைக்கான, மாநில அளவிலான, 16 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி, முதல் சுற்று ஆட்டம், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது. 'இ' மண்டலத்துக்கு உட்பட்ட அணிகளுக்கான போட்டி, கோவையில் நடக்கிறது.பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில், செங்கல்பட்டு மற்றும் திருப்பத்துார் அணிகள் மோதின. முதிலில் பந்து வீசிய செங்கல்பட்டு அணி, எதிரணியை, 24.1 ஓவர்களில், 51 ரன்களுக்கு சுருட்டியது. அணியின் சந்தீப் அபாரமாக பந்து வீசி, ஏழு விக்கெட்கள் கைப்பற்றினார்.அடுத்து களமிறங்கிய செங்கல்பட்டு அணியினர், 2 ஓவர்களில், 11 ரன் எடுத்திருந்த நிலையில், மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டம் ரத்து செய்யப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா இரண்டு புள்ளிகள் பிரித்து வழங்கப்பட்டன. சக்தி கல்லுாரி மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில், சேலம் அணி முதலில் 'பேட்டிங்' செய்து, 44.2 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு, 209 ரன் எடுத்தது. சேலம் அணிக்காக, தியோன் ராஜ் (48), கார்த்திகேயன் (42) மற்றும் சம்ரித் (34) ரன் சேர்த்தனர்.பின்னர் மழை பெய்ததால், (சராசரி ரன் ரேட் முறையில்) திருவாரூர் அணி வெற்றி பெற, 25 ஓவர்களில், 118 ரன் நிர்ணயிக்கப்பட்டது. திருவாரூர் அணி, 25 ஓவர்களில், 9 விக்கெட் இழப்புக்கு, 50 ரன் மட்டுமே எடுத்தது. இதனால் சேலம் அணி, 67 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது; சேலம் அணியின் கவுதம், ஐந்து விக்கெட் எடுத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X