ஆதார் எண் இணைப்பு: ஆணையம் விழிப்புணர்வு

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை-வாக்காளர் அடையாள அட்டையில், ஆதார் எண் இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'செஸ்' போட்டியை மையப்படுத்தி, தேர்தல் கமிஷன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, தேர்தல்கமிஷன் துவங்கியுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை சேகரிக்க

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை-வாக்காளர் அடையாள அட்டையில், ஆதார் எண் இணைப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 'செஸ்' போட்டியை மையப்படுத்தி, தேர்தல் கமிஷன் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டுள்ளது.



latest tamil news




தமிழகத்தில் வாக்காளர் பட்டியலுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணியை, தேர்தல்கமிஷன் துவங்கியுள்ளது. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று, வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை சேகரிக்க உள்ளனர்.ஆதார் எண்ணை இணைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறது.


latest tamil news



அந்த வகையில், தமிழகத்தில் தற்போது 'செஸ் ஒலிம்பியாட்' போட்டிகள் நடப்பதால், அதை மையப்படுத்தி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை அச்சிட்டு, வினியோகம் செய்து வருகிறது.அதில், 'சரியான நகர்வு, சதுரங்கத்தின் வெற்றி; வாக்காளருக்கான சரியான நகர்வு, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பது' எனக் குறிப்பிட்டுள்ளனர். வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைப்பதற்கான வழிமுறைகளையும் அச்சிட்டுள்ளனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
06-ஆக-202212:51:05 IST Report Abuse
Natarajan Ramanathan I tried to link my Aadhar with my voter ID online. It is displaying continuously ING DATA From 91 CRORE VOTERS and finally logs out.
Rate this:
Cancel
Sai - Paris,பிரான்ஸ்
06-ஆக-202207:01:38 IST Report Abuse
Sai இப்படி விளம்பரம் நோட்டீஸ் அடிக்கிறேன்னு கோடிகளில் கொள்ளை தேர்தல் "கமிஷனுமா" இப்படி?
Rate this:
Sharvintej - மதுரை ,இந்தியா
06-ஆக-202213:08:09 IST Report Abuse
Sharvintej திராவிட மாடலுக்கே விளம்பரம் பண்ணும் போது இது எவ்வுளவோ மேல்...
Rate this:
Cancel
Manimaran - chennai,இந்தியா
06-ஆக-202206:21:43 IST Report Abuse
Manimaran இணைப்பதற்கான வழிமுறைகளையும் கொடுத்திருந்தால் செய்தியாக மட்டும் இல்லாமல் செயலுக்கும் வந்திருக்குமே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X