காங்கிரசார் சாலைமறியல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:விலைவாசி, காஸ் விலை உயர்வு, அரிசி மீதான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில் மாநகர் மாவட்ட காங்., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.மூத்த நிர்வாகிகள் ரயில்வே ஸ்டேஷன் முன்புறமும், இளைஞரணி, சிறுபான்மையினர் பிரிவினர் தபால் நிலையம் முன்பும் தனித்தனியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 86 பேர்
காங்கிரசார் சாலைமறியல்

திருப்பூர்:விலைவாசி, காஸ் விலை உயர்வு, அரிசி மீதான ஜி.எஸ்.டி.,யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூரில் மாநகர் மாவட்ட காங்., சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.மூத்த நிர்வாகிகள் ரயில்வே ஸ்டேஷன் முன்புறமும், இளைஞரணி, சிறுபான்மையினர் பிரிவினர் தபால் நிலையம் முன்பும் தனித்தனியே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட, 86 பேர் கைதாகி, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சித்திக் முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் கோபால்சாமி வரவேற்றார்.மாவட்ட பொது செயலாளர்கள் ரவீந்திரன், சிவசுப்ரமணி, விவசாய அணி செயலாளர் பழனிசாமி, ஐ.என்.டி.யு.சி., செயலாளர் சிவசாமி, சிறுபான்மை பிரிவு, இளைஞரணி செயலாளர் உள்ளிட்டோர் பேசினர்.

பல்லடம்
பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வடக்கு மாவட்ட தலைவர் கோபி தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, வட்டாரத் தலைவர் புண்ணியமூர்த்தி, கணேஷ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொது செயலாளர் நரேஷ் குமார், நகர பொது செயலாளர் கிருஷ்ணகுமார், இளைஞர் காங்., மாவட்ட பொதுச் செயலாளர் ராமச்சந்திரன், சிறுபான்மை மாவட்ட செயலாளர் சாகுல் அமீது உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின், மறியலிலும் ஈடுபட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X