இரு தரப்பினர் தகராறு:போலீசார் வழக்கு பதிவு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பல்லடம்:பல்லடம் நகராட்சி, பச்சாபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. தன்னையும் தனது குடும்பத்தையும், கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதாக, நகராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் சுகன்யா, கோவில் கமிட்டி நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளித்தார்.இதேபோல், கவுன்சிலரின் கணவர் ஜெகதீஷ், ஆளுங்கட்சியினருடன் இணைந்து மிரட்டுவதாக, அப்பகுதி மக்களும் புகார் அளித்தனர். இது குறித்து

பல்லடம்:பல்லடம் நகராட்சி, பச்சாபாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. தன்னையும் தனது குடும்பத்தையும், கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பதாக, நகராட்சி, 8வது வார்டு கவுன்சிலர் சுகன்யா, கோவில் கமிட்டி நிர்வாகிகள் மீது போலீசில் புகார் அளித்தார்.இதேபோல், கவுன்சிலரின் கணவர் ஜெகதீஷ், ஆளுங்கட்சியினருடன் இணைந்து மிரட்டுவதாக, அப்பகுதி மக்களும் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இப்பிரச்னை தற்போது மேலும் நீடித்தது.இந்நிலையில், விக்னேஷ்வரன், 40, என்பவர், மாகாளியம்மன் கோவில் கணக்கு வழக்குகள் குறித்து வாட்ஸ் 'வாட்ஸ் அப்' ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். கோவில் கணக்கை எதற்காக ஸ்டேட்டஸ் வைக்க வேண்டும் என, கோவில் கமிட்டியில் உள்ள வெங்கடேஸ்வரன், 50 என்பவர் கேட்டுள்ளார்.இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இது குறித்து, விக்னேஷ்வரன் மனைவி ஆனந்தி அளித்த புகாரின் பேரில், வெங்கடேஸ்வரன், செல்வராஜ், ரங்கராஜ், மற்றும் சிலர் மீதும், வெங்கடேஸ்வரன் அளித்த புகாரின் பேரில், விக்னேஷ்வரன், ஆனந்தி, தர்மலிங்கம், ஜெததீஷ் உட்பட பலர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X