கழுத்து நெரித்து பெண் கொலை?ரூ.10 லட்சம், 10 சவரன் மாயம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருப்பூர்:திருப்பூரில், மர்மமான முறையில் மூதாட்டி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கம், பத்து சவரன் மாயமாகியிருந்ததாக கணவர் புகார் அளித்துள்ளார்.திருப்பூர், வேலம்பாளையம் அடுத்த சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன், 65. இவரது மனைவி முத்துலட்சுமி, 60. தம்பதிக்கு, இரண்டு மகன்கள். திருமணமாகி அருகே வசித்து
கழுத்து நெரித்து பெண் கொலை?ரூ.10 லட்சம், 10 சவரன் மாயம்

திருப்பூர்:திருப்பூரில், மர்மமான முறையில் மூதாட்டி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கம், பத்து சவரன் மாயமாகியிருந்ததாக கணவர் புகார் அளித்துள்ளார்.திருப்பூர், வேலம்பாளையம் அடுத்த சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன், 65. இவரது மனைவி முத்துலட்சுமி, 60. தம்பதிக்கு, இரண்டு மகன்கள். திருமணமாகி அருகே வசித்து வருகின்றனர்.கோபாலன், குமார் நகர், 60 அடி ரோட்டில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இரண்டு மாடியில், 10 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். தரைத்தளத்தில் தம்பதி மட்டும் வசித்து வருகின்றனர்.நேற்று மதியம், கோபாலன் வீட்டுக்கு வந்து விட்டு பனியன் நிறுவனத்துக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது, கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, முத்துலட்சுமி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.அந்த அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. அந்த அறை, வீட்டுக்கு வெளியே மிளகாய் பொடி துாவப்பட்டு இருந்தது.போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் அபினவ்குமார் அங்கு சென்று விசாரித்தனர். முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து துாக்கில் தொங்க விட்டு, நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனரா என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.பீரோவில் இருந்த10 லட்சம் ரூபாய் ரொக்கம், பத்து சவரன் நகை காணாமல் போனதாக, கணவர் கோபாலன் புகார் கொடுத்துள்ளார். 'முத்துலட்சுமி இறந்தது எப்படி என்பது பிரேத பரிசோதனையில்தான் தெரியவரும்' என்கின்றனர் போலீசார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X