சுகாதார நிலையம் அமைக்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
வால்பாறை:வால்பாறையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் கருமலை பஜார் அமைந்துள்ளது. சுற்றுப்பகுதியில், ஊசி மலை, வெள்ளமலை, அக்காமலை, பச்சமலை ஆகிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்களில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.இந்தப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 8 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு தான் செல்ல

வால்பாறை:வால்பாறையில் இருந்து, 8 கி.மீ., தொலைவில் கருமலை பஜார் அமைந்துள்ளது. சுற்றுப்பகுதியில், ஊசி மலை, வெள்ளமலை, அக்காமலை, பச்சமலை ஆகிய தேயிலை எஸ்டேட்கள் உள்ளன. இந்த எஸ்டேட்களில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.இந்தப்பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால், தொழிலாளர்கள், 8 கி.மீ., தொலைவில் உள்ள வால்பாறை நகருக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. சாதாரண காய்ச்சல், சளி என்றால் கூட வால்பாறைக்கு செல்ல வேண்டியுள்ளதால், சிகிச்சை பெற அவதிப்படுகின்றனர்.தொழிலாளர்கள் கூறியதாவது:கருமலை பஜார் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என, கடந்த 10 ஆண்டுளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்வதில்லை.இந்தப்பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள்,சாதாரண காய்ச்சல், தலைவலிக்கு கூட வால்பாறைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே எஸ்டேட் பகுதி மக்களின் நலன் கருதி, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில், கருமலை பஜாரில் துணை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X