மாவட்ட அளவிலான கோ-கோ; துரத்திப்பிடித்த மாணவியர்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:பள்ளி மாணவியருக்கான மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில், மாணவியர் துரத்திப்பிடித்து திறமையை காட்டினர்.கீதாஞ்லி பப்ளிக் பள்ளி சார்பில், பள்ளி மாணவியருக்கான, 43வது கோயம்புத்துார் சகோதயா இன்டர் ஸ்கூல் கோ-கோ போட்டி, பீளமேடு 'கொடிசியா' அருகில் உள்ள கீதாஞ்சலி பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது; அங்கப்பா சீனியர் செகண்டரி பள்ளி சேர்மன் நவமணி துவக்கி வைத்தார். கீதாஞ்சலி

கோவை:பள்ளி மாணவியருக்கான மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில், மாணவியர் துரத்திப்பிடித்து திறமையை காட்டினர்.கீதாஞ்லி பப்ளிக் பள்ளி சார்பில், பள்ளி மாணவியருக்கான, 43வது கோயம்புத்துார் சகோதயா இன்டர் ஸ்கூல் கோ-கோ போட்டி, பீளமேடு 'கொடிசியா' அருகில் உள்ள கீதாஞ்சலி பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது; அங்கப்பா சீனியர் செகண்டரி பள்ளி சேர்மன் நவமணி துவக்கி வைத்தார். கீதாஞ்சலி பள்ளி சேர்மன் அழகிரிசாமி, கீதாஞ்சலிபப்ளிக் பள்ளி முதல்வர் கவிதா உடனிருந்தனர்.மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 47 பள்ளிகளை சேர்ந்த, 97 அணிகள் பங்கேற்றுள்ளன. 12, 14, 16 மற்றும், 19 வயது பிரிவுகளில், 'நாக் - அவுட்' முறையில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.நேற்று நடந்த முதல் சுற்றுப்போட்டியில், 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி அணி, 17-2 என்ற புள்ளிக்கணக்கில் நேஷனல் மாடல் பள்ளியையும்; வித்யா நிகேதன் பள்ளி அணி, 10-6 என்ற புள்ளிக்கணக்கில் பெங்கிளேன் பள்ளியையும் வீழ்த்தின. 14 வயது பிரிவில், ஆர்பிஸ் பள்ளி அணி, 14-12 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.பி.பி., பள்ளி அணியையும், ஒயிட் ஈகில் பள்ளி, 16-14 என்ற புள்ளிக்கணக்கில் இதழ் பள்ளி அணியையும் வென்றன.16 வயது பிரிவில், ஸ்ரீவிநாயகா வித்யாலயா பள்ளி அணி, 10-7 என்ற புள்ளிக்கணக்கில் யுனைடெட் பள்ளியையும், விஷ்வ சிஷ்ய வித்யோதயா பள்ளி 9-6 என்ற புள்ளிக்கணக்கில் கே.ஜி., பள்ளி அணியையும் வீழ்த்தி வெற்றி பெற்றன. 19 வயது பிரிவில், சந்திரகாந்தி பள்ளி அணி, 23-15 என்ற புள்ளிக்கணக்கில், விஷ்வ சிஷ்ய வித்யோதயா பள்ளி அணியையும், நவபாரத் பள்ளி, 13-5 என்ற புள்ளிக்கணக்கில் நேஷனல் மாடல் பள்ளி அணியையும் வீழ்த்தின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X