ராமகிருஷ்ணா இன்ஜினியரிங்கல்லுாரியில் விளையாட்டு விழா

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் விளையாட்டு விழா நடந்தது.கோவையில் உள்ள ராமகிருஷ்ணா பார்மசி கல்லுாரி சார்பில், இங்கு நடந்த விளையாட்டு விழாவில், பார்மசி கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 1,500மீ., 800மீ., 400மீ., 200மீ., ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகள் நடந்தன.விழாவில், 1,500மீ.,
ராமகிருஷ்ணா இன்ஜினியரிங்கல்லுாரியில் விளையாட்டு விழா

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் விளையாட்டு விழா நடந்தது.கோவையில் உள்ள ராமகிருஷ்ணா பார்மசி கல்லுாரி சார்பில், இங்கு நடந்த விளையாட்டு விழாவில், பார்மசி கல்லுாரியை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 1,500மீ., 800மீ., 400மீ., 200மீ., ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் போட்டிகள் நடந்தன.விழாவில், 1,500மீ., ஆண்களுக்கான ஓட்டத்தில், முதல் மூன்று இடங்களை முறையே ஜோயல் பிரின்ஸ், டில்லி பாபு, கவின் குமார் ஆகியோர் பெற்றனர். 800மீ., பெண்களுக்கான ஓட்டத்தில் கவுசிகா, ஸ்ரீபாக்யா யாழினி, சர்மிளா ஆகியோரும், 200மீ., ஆண்களுக்கான ஓட்டத்தில் அருள்கனி, முகேஷ், ரூபன் ஆகியோரும், பெண்களுக்கான போட்டியில் அட்சயா, அக்சரதி, சிவரஞ்சனி ஆகியோரும், 400மீ., ஆண்களுக்கான போட்டியில் கவாஸ்கர், தோபித் சல்மா, பார்கவ் ஆகியோரும், 400மீ., பெண்களுக்கான போட்டியில் கீர்த்தனா, ஷர்மிளா, கவுசிகா ஆகியோரும் வெற்றி பெற்றனர்.போட்டிக்கான ஏற்பாடுகளை, வட்டமலைபாளையம் ராமகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லுாரி உடற்கல்வித்துறை செய்திருந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X