கோவை:ராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில், ஆடி உற்சவ சொற்பொழிவு நடந்து வருகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை வரை, மாலை, 6:30 மணிக்கு 'என் இனிய ஹிந்து தர்மம்' குறித்து, ஸ்ரீ கிருஷ்ண ஜெகன்நாதன் சொற்பொழிவாற்றுகிறார்.வரும், 8 முதல், 15 வரை 'பகவத்கீதை ஞான யக்ஞம்' குறித்து, ஸ்ரீ ரமணசரணதீரத்த நொச்சூர் ஆசார்யர் சொற்பொழிவாற்றுகிறார். மோட்சம், முக்தி, சன்னியாசயோகம், பூரணதியாகம் என்பதை சொல்வதே, 'பகவத்கீதை ஞான யக்ஞம்'. இதுபற்றிய சொற்பொழிவு, மாலை, 6:30 முதல், 8:30 மணி வரை நடக்கிறது.வரும், 13 காலை, 9:00 முதல், 1:00 மணி வரை, மதியம், 2:00 முதல், 5:00 மணி வரை ஸ்ரீமதி மைதிலி ராமநாதன் குழுவினரின் நாராயணீயம் பாராயணம் நடக்கிறது. 14ம் தேதி காலை, 9:00க்கு ஸ்ரீ ராமகோபால், ஸ்ரீ கிருஷ்ணன் பாகவதர் குழுவினரின் ஸ்ரீஜெயதேவர் அஷ்டபதி நடக்கிறது. பிற்பகல், 3:00 முதல், 6:00 மணி வரை குமாரி சிவஸ்ரீ ஸ்கந்தப்பிரசாத் குழுவினரின் தேவதா தியானங்களும், இரவு, 8:30க்கு, கடையநல்லுார் ஸ்ரீராஜகோபால் பாகவதர் குழுவினரின் திவ்யநாம சங்கீர்த்தன நிகழ்ச்சியும் நடக்கின்றன.வரும், 15ம் தேதி காலை, ஸ்ரீ கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதர் குழுவினரின் ஸ்ரீ சீதாராம கல்யாண மஹோத்சவம், ஸ்ரீ ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்க நிர்வாகக்கமிட்டி செய்துள்ளது.