'தலைமை பண்பு என்பதுவெற்றியாளரின் சிறந்த பண்பு'

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி, நடந்தது.அதில், தக் ஷின் பாரத் ஏரியா கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அருண் பேசியதாவது: தலைமை பண்பு என்பது வெற்றியாளர்களின் சிறந்த பண்புகளில் ஒன்று. பெரிய வெற்றியை அடைவதற்கு மனிதவளம் மிகவும் அவசியம். கற்பித்தலில், பாடம் குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான்
'தலைமை பண்பு என்பதுவெற்றியாளரின் சிறந்த பண்பு'

கோவை:கோவை ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிகழ்ச்சி, நடந்தது.அதில், தக் ஷின் பாரத் ஏரியா கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் அருண் பேசியதாவது: தலைமை பண்பு என்பது வெற்றியாளர்களின் சிறந்த பண்புகளில் ஒன்று. பெரிய வெற்றியை அடைவதற்கு மனிதவளம் மிகவும் அவசியம். கற்பித்தலில், பாடம் குறித்து விவாதிக்க வாய்ப்பளிக்க வேண்டும். அப்போதுதான் கற்றல் வெற்றிபெறும். எந்த செயலை எடுத்துக் கொண்டாலும் அதில், 100 சதவீதம் உழைப்பை பயன்படுத்த வேண்டும்.ஆசிரியர்கள் மூலமாக பெறும் கற்றலே சிறந்த அறிவை உருவாக்கும். ஆசிரியர்கள் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். மாணவர்கள் என்ன படிக்கிறார்களோ, அதை முழுமையாகக் கற்றுத்தெளிய வேண்டும். கல்லுாரிகளைப் பொறுத்தவரை 'ரேங்க்' பெறுவது முக்கியமல்ல. மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்குவதே முக்கியம். இவ்வாறு, அவர் பேசினார்.எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். ஸ்ரீராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி முதல்வர் சிவக்குமார் வரவேற்றார். பாரதியார் பல்கலை அண்ணா ஐ.ஏ.எஸ்., அகாடமி இயக்குனர் பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், சிறப்பாக பதிலளித்த மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X