ரோடு சீரமைக்கணும்!
சோமந்துறைசித்துார் - ஆனைமலை ரோட்டில், பெத்தநாயக்கனுார் பிரிவு அருகே ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டிலுள்ள குழியை விரைவில் சரிசெய்ய வேண்டும்.- கதிர்வேல், சோமந்துறை.
வாகனங்கள் ஆக்கிரமிப்பு
வால்பாறை புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பாலத்தை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்துவோருக்கு அபராதம் விதித்து கட்டுப்படுத்த வேண்டும்.- நவீன், வால்பாறை.
ரோடு படுமோசம்
ஜமீன்ஊத்துக்குளி கிருஷ்ணாகுளம் ரோடு சிதிலமடைந்து குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- மகேஸ், பொள்ளாச்சி.
ரோட்டை விரிவுபடுத்துங்க!
வால்பாறை நகரில் இருந்து தெற்கு டிவிஷன் செல்லும் ரோடு குறுகலாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். நகராட்சி அதிகாரிகள் ரோட்டை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கவின், நடுமலை எஸ்டேட்.
ஒளிராத தெருவிளக்கு
பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு ஜலத்துார் பிரிவில், தெருவிளக்கு பழுதாகி பல மாதங்களாக சரிசெய்யப்படாமல் உள்ளதால், மக்கள் இரவு நேரங்களில் நடமாட முடியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.- சக்திவேல், பொள்ளாச்சி.
குப்பையை அகற்றுங்க!
பொள்ளாச்சி, சுப்ரமணிய சுவாமி கோவில் சுற்றுச்சுவர் அருகே, குப்பை குவிக்கப்பட்டு உள்ளதால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. குப்பையை விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்.- கிருஷ்ணன், பொள்ளாச்சி.
வாகனங்களால் இடையூறு
பொள்ளாச்சியில், கோவை ரோட்டில் வாகனங்கள் அத்துமீறி பார்க்கிங் செய்யப்படுகின்றன. அந்த வாகனங்களை நிறுத்தி, எடுக்கும் போது, போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அங்கு வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- குணசேகரன், பொள்ளாச்சி.
நிழற்கூரை வேண்டும்
பொள்ளாச்சி, தேர்நிலையம் அருகே நிழற்கூரை கட்டப்படாமல் உள்ளதால், மக்கள் பஸ்சுக்காக காத்திருக்க முடியாமல் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். விரைவில் நகராட்சி சார்பில், நிழற்கூரை அமைக்க வேண்டும்.- முருகேசன், பொள்ளாச்சி.
'பேட்ச் ஒர்க்' செய்யணும்!
ஆனைமலை, சேத்துமடை - பொன்னாலம்மன்துறை ரோட்டில், பல இடங்களில் குண்டும் குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டுனர்கள் விபத்துக்கு உள்ளாகின்றனர். ரோட்டில் 'பேட்ச் ஒர்க்' செய்து சீரமைக்க வேண்டும்.- குபேந்திரன், காளியாபுரம்.