தொடர் மழையால் அணைகளில்இருந்து உபரிநீர் வெளியேற்றம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:மேற்கு தொடர்ச்சிமலையில் பெய்யும் தொடர் மழையால், ஆழியாறு மற்றும் பரம்பிக்குளம் அணையில் இருந்து, தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. பருவமழை காரணமாக, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.அதில், பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில், நேற்று காலை
தொடர் மழையால் அணைகளில்இருந்து உபரிநீர் வெளியேற்றம்

பொள்ளாச்சி:மேற்கு தொடர்ச்சிமலையில் பெய்யும் தொடர் மழையால், ஆழியாறு மற்றும் பரம்பிக்குளம் அணையில் இருந்து, தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்கிறது. பருவமழை காரணமாக, பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.அதில், பரம்பிக்குளம் அணையின் 72 அடி உயரத்தில், நேற்று காலை நிலரவப்படி, 68.10 அடி நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு, 13,617 கனஅடி நீர் வரத்தாகவும்; 14,869 கனஅடி நீர் மதகுகள் வழியாக வெளியேற்றமும் இருந்தது. அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அதே போன்று, ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், 117.50 அடி நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு, 3,661 கனஅடி நீர் வரத்தும், மதகுகள் வழியாக, 3,742 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது. ஆழியாறு அணையில் இருந்து, தொடர்ந்து இரண்டாவது நாளாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

பாலாற்றில் வெள்ளம்
பாலாறு பகுதியிலும் மழை பெய்வதால், பாலாற்றிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதில், பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்லும் தரை மட்ட பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. இதனால், பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. ஆழியாறு ஆற்றில், அம்பராம்பாளையத்தில் பாலாறு நீர் கலந்து செல்வதால், நீர் நிறம் மாறியுள்ளதுடன், நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம், என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X