தண்ணீர், மின் வசதி இல்லாத அங்கன்வாடி மையம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி முதல் வார்டில் தண்ணீர்,மின் வசதி இன்றி அங்கன்வாடி மையம் முடங்கியுள்ளது. சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி சுகாதார கேடு நிலவும் அவல நிலை தொடர்கிறது.நகராட்சி முதல் வார்டில் நேருஜி ரோடு, நேருஜி ரோடு முதல் தெரு, வடக்கு மெயின் ரோடு, பஜார் தெரு, லிங்கம்மாள் தெரு, திரு.வி.க.,தெரு, பட்டாணி தெரு, பாலன் நகர் 2வது தெரு, பள்ளி ஓடை என ஒன்பது தெருக்கள்


தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சி முதல் வார்டில் தண்ணீர்,மின் வசதி இன்றி அங்கன்வாடி மையம் முடங்கியுள்ளது. சாக்கடை கழிவுநீர் செல்ல வழியின்றி சுகாதார கேடு நிலவும் அவல நிலை தொடர்கிறது.நகராட்சி முதல் வார்டில் நேருஜி ரோடு, நேருஜி ரோடு முதல் தெரு, வடக்கு மெயின் ரோடு, பஜார் தெரு, லிங்கம்மாள் தெரு, திரு.வி.க.,தெரு, பட்டாணி தெரு, பாலன் நகர் 2வது தெரு, பள்ளி ஓடை என ஒன்பது தெருக்கள் உள்ளன. பள்ளி ஓடை தெருவில் கழிவுநீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால் தெருவில் திறந்த வெளியில் செல்கின்றது. கழிவுநீர் வாய்காலில் குப்பை அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழியின்றி பல இடங்களில் தேங்கி உள்ளது. இப் பகுதியில் நீண்டகாலமாக கழிவுநீர் பிரச்னை உள்ளது.


வார்டு பொதுமக்கள் கருத்து




சாக்கடை வசதி இன்றி சிரமம்


ஈஸ்வரன், பாலன் நகர், தேனி: இப் பகுதியில் 400 குடும்பங்கள் உள்ளன. தெருவில் பல ஆண்டாக சாக்கடைப் பிரச்னை உள்ளது. பலமுறை இப் பகுதி வார்டு கவுன்சிலரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. குடிநீர் ஒருநாள் விட்டு ஒருநாள் வருவதால் பற்றாக்குறை நிலவுகிறது. குப்பை அகற்ற சுகாதாரப்பணியாளர்கள் இரு நாட்களுக்கு ஒருமுறை வருகிறார்கள். அவர்கள் வந்தாலும் மெயின் தெருவில் உள்ள வீடுகளில் சேகரித்து செல்கின்றனர். தெருவின் உள்பகுதிகளில் உள்ள வீடுகளில் குப்பை சேகரிப்பது இல்லை. இங்கு குப்பைத் தொட்டி அமைத்து சேகரிக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும்.


வசதி இல்லாத அங்கன்வாடி


வினோத், பள்ளி ஓடை தெரு, தேனி: பள்ளி ஓடை தெருவை ஒட்டிய ஒண்டி வீரன் நகரில் 2015ல் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் இதுவரை செயல்படவில்லை. 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் வந்து செல்கின்றனர். அங்கன்வாடிக்கு தண்ணீர்,மின்சார வசதி இல்லை. அதனால் அருகில் உள்ள சமுதாய கூடத்தில் அங்கன்வாடி செயல்பட்டு வருகிறது. அங்கும் மின்சார வசதி இல்லை. பள்ளி ஓடை தெருவில் மெயின் ரோட்டில் சாக்கடை வசதியின்றி மழை நீருடன் சேர்ந்து தெருக்களில் தேங்குகிறது. கழிவுநீர் வாய்கால் சுத்தம் செய்வது இல்லை. குப்பை சேகரிக்க ஆட்கள் வராததால் தெருவில் கொட்டுகின்றனர். ஒண்டி வீரன் காலனியில் ஆண்கள் பெண்களுக்கான இலவச கழிப்பறையை சிலர் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டி வைத்துள்ளனர். கழிப்பறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X