மழையால் பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கை! வழிகாட்டும் தோட்டக்கலைத்துறை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உடுமலை;மழையால், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற, மடத்துக்குளம், உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பதை தவிர்க்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.பழ மரங்களான மா, கொய்யா, எலுமிச்சை மற்றும் பலா

உடுமலை;மழையால், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பதை தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற, மடத்துக்குளம், உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறையினர் வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், தோட்டக்கலை பயிர்கள் பாதிப்பதை தவிர்க்க வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.
பழ மரங்களான மா, கொய்யா, எலுமிச்சை மற்றும் பலா பயிரிட்டுள்ள விவசாயிகள் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி, கவாத்து செய்ய வேண்டும்.அடிப்பகுதியில் மண் அணைத்து, தண்டு பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும். தோட்டத்தில் வடிகால் வசதி செய்வது அவசியமாகும்.இளம் செடிகள் காற்றில் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கன மழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின், உடனடியாக வேர்ப்பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும்.

வாழை, பப்பாளிக்கு...
காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு, வாழை பப்பாளி மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும்; 75 சதவீதத்திற்கும் மேல் முதிர்ந்த வாழைத்தார்களை பழங்களை அறுவடை செய்தல் வேண்டும்.

காய்கறி பயிர்களுக்கு...
காய்கறி பயிர்களுக்கு தக்காளி, மிளகாய் கத்தரி வெண்டை, வெங்காயம் மற்றும் இதர காய்கறி பயிர் செய்துள்ள விவசாயிகள், அனைத்து வயல்களிலும் நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.நீர்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை, தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க, காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக்கொடுத்து, புதிதாக நடவு செய்த செடிகள் சாயாத வண்ணம் பாதுகாக்கலாம்.வயல்களில் தேவையான பயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலே கூறிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் உள்ள தோட்டக்கலை பயிர்களை, மழை மற்றும் அதிக காற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.மேலும் அதிக காற்று மற்றும் மழையினால் தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் அடையும் பட்சத்தில், அந்தந்த வருவாய் கிராமத்தைச்சேர்ந்த விவசாயிகள், உங்கள் பகுதியில் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு சேதமடைந்த பயிர்களைப் பற்றி விபரம் தெரிவிக்கலாம்.தகவல் சொல்லுங்க...மழையினால் தோட்டக்கலைப் பயிர்கள் சேதம் அடைந்திருந்தால், மடத்துக்குளம் வட்டார விவசாயிகள் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.துங்காவி உள் வட்டத்தைச்சேர்ந்த விவசாயிகள், உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன் 96598-38787; மடத்துக்குளம் உள் வட்ட விவசாயிகள் நித்யராஜ், 84890-95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.மேலும் விபரங்கள் அறிய தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமாரை 97905-82010 என்ற மொபைல் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X