வெள்ளையபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
திருவாடானை : திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறையால் 50 கிராம மக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.வெள்ளையபுரம், பனஞ்சாயல், சிறுகம்பையூர், பதனக்குடி உள்ளிட நான்கு ஊராட்சிகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளையபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு ஒரு டாக்டரும், இரு



திருவாடானை : திருவாடானை அருகே வெள்ளையபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் பற்றாக்குறையால் 50 கிராம மக்கள் சிகிச்சை பெற முடியாமல் அவதிப்படுகின்றனர்.வெள்ளையபுரம், பனஞ்சாயல், சிறுகம்பையூர், பதனக்குடி உள்ளிட நான்கு ஊராட்சிகளில் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெள்ளையபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தான் சிகிச்சை பெறுகின்றனர். இங்கு ஒரு டாக்டரும், இரு நர்ஸ்களும் பணியாற்றுகின்றனர்.

மதியம் 2:00 மணி வரை மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், இப்பகுதி மக்கள்20 கி.மீ., துாரமுள்ள திருவாடானை, தொண்டி செல்ல வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.வெள்ளையபுரம் ஊராட்சி தலைவர் பரக்கத்தலி கூறியது:இரவு நேரங்களில் திடீரென கர்ப்பிணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டாலோ, பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்து பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சை பெற சென்றால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாமல்சிரமப்படுகின்றனர்.

எனவே, இரவில் டாக்டர் தங்கி பணியாற்றும் வகையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும்.மருத்துவமனை கட்டடம் மிகவும் சேதமடைந்துஉள்ளது. ஆகவே கட்டடத்தை சீரமைக்கவும், எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X