உழவர் உற்பத்தியாளர் குழு சார்பில் விற்பனை மையம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
தேனி, : உத்தமபாளையம் தாலுகா பொட்டிபுரம் ராமகிருஷ்ணாபுரத்தில் பென்னிகுவிக் உழவர் உற்பத்தியாளர்கள் குழு சார்பில், வேளாண் இடுபொருட்கள் விற்பனை மையம் திறக்கப்பட்டது. இங்குள்ள கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் உத்தமபாளையம், கம்பம், போடி, சின்னமனுாரை சேர்ந்த 1000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் சிங்கராஜ் தலைமையில் 10 இயக்குனர்கள் குழுவை



தேனி, : உத்தமபாளையம் தாலுகா பொட்டிபுரம் ராமகிருஷ்ணாபுரத்தில் பென்னிகுவிக் உழவர் உற்பத்தியாளர்கள் குழு சார்பில், வேளாண் இடுபொருட்கள் விற்பனை மையம் திறக்கப்பட்டது. இங்குள்ள கூட்டுப்பண்ணைய உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் உத்தமபாளையம், கம்பம், போடி, சின்னமனுாரை சேர்ந்த 1000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தலைவர் சிங்கராஜ் தலைமையில் 10 இயக்குனர்கள் குழுவை நிர்வகிக்கின்றனர். குழு சார்பில் வேளாண் இடுபொருள் மையம் அமைக்கப்பட்டது.

அதனை வேளாண் இணை இயக்குனர் அனுசுயா திறந்து வைத்தார். வேளாண் வணிக துணை இயக்குனர் பால்ராஜ், சின்னமனுார் உதவி இயக்குனர் பாண்டி, மதுரை விதை ஆய்வாளர் அஜ்மல்கான் முன்னிலை வகித்தனர். வேளாண் வணிகத்துறை அலுவலர்கள் சங்கரநாராயணன், ராகுல்தேவ், முத்துக்கருப்பையா, கருணாநிதி பங்கேற்றனர். இங்கு அனைத்து விவசாயிகளுக்கும் குறைந்தபட்ச சில்லரை விலையில் இருந்து 10 சதவீத தள்ளுபடியில் உரம், பூச்சி மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X