நூற்பாலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் | Dinamalar

நூற்பாலை தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

Added : ஆக 06, 2022 | |
தேனி, : க.விலக்கு அண்ணா கூட்டுறவு நுாற்பாலையில் வெளி மாநில தொழிலாளர்களை பணிக்கு நியமித்ததை கண்டித்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நுாற்பாலையில் 20 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் 300 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூலியாக ரூ.150 வழங்கினர். ஊதிய உயர்வு கோரி பல ஆண்டாக போராடிவருகின்றனர். இந்நிலையில்



தேனி, : க.விலக்கு அண்ணா கூட்டுறவு நுாற்பாலையில் வெளி மாநில தொழிலாளர்களை பணிக்கு நியமித்ததை கண்டித்து தொழிற்சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நுாற்பாலையில் 20 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் 300 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தினக்கூலி தொழிலாளர்களுக்கு கூலியாக ரூ.150 வழங்கினர். ஊதிய உயர்வு கோரி பல ஆண்டாக போராடிவருகின்றனர்.

இந்நிலையில் வெளி மாநில தொழிலாளர்கள் 20 பேரை நேற்று பணியில் நியமித்தனர். இவர்களுக்கு தினகூலியாக ரூ. 250 நிர்ணயித்துள்ளனர். ஏற்கனவே பணி செய்து கொண்டிருக்கும் ஆண்டிபட்டி தினக்கூலி பணியாளர்கள பாதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் நுாற்பாலை நுழைவாயில் முன் ஆலை நிர்வாகத்தை கண்டித்து சி.ஐ.டி.யு., மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் லட்சுமணன், சரவணன், தொ.மு.ச., நிர்வாகிகள் காளிமுத்து உள்பட பல்வேறு சங்கத்தினர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X