தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:நாட்டின், 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடும் வகையில், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள், தேசியக்கொடி வாங்கும் வகையில், தபால் அலுவலகங்களில் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தலைமை தபால்
தபால் அலுவலகங்களில் தேசியக்கொடி விற்பனை

பொள்ளாச்சி:நாட்டின், 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாடும் வகையில், வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றும் திட்டத்தை, மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி வரும், 13ம் தேதி முதல், 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள், தேசியக்கொடி வாங்கும் வகையில், தபால் அலுவலகங்களில் விற்பனை துவங்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகம், கடைவீதி, மகாலிங்கபுரம், என்.ஜி.எம்., கல்லுாரி தபால் அலுவலகம், மாக்கினாம்பட்டி உள்ளிட்ட கிளை அஞ்சல் அலுவலகங்களிலும் தேசியக்கொடி விற்பனை நடக்கிறது.வால்பாறை நகரில் உள்ள அஞ்சலத்தில் தேசியக்கொடி விற்பனையை, போஸ்ட் மாஸ்டர் ஜீவானந்தம் துவக்கி வைத்தார். வால்பாறை, முடீஸ், கருமலை, சின்கோனா உள்ளிட்ட எட்டு துணை அஞ்சலகங்களில் தேசியக்கொடி விற்பனை துவங்கியுள்ளது.அஞ்சல் அலுவலகங்களில், ஒரு கொடியின் விலை, 25 ரூபாயாகும். அஞ்சலகங்களில், 'செல்பி போர்டு' வைக்கப்பட்டுள்ளது. தேசியக்கொடி வாங்கும் மக்கள், செல்பி போர்டு முன் நின்று படம் எடுத்து இணையதளத்தில் பகிர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X