போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கு விசாரணையை முடிக்க 'கெடு'

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : கூரியர் மூலம் போதைப் பொருட்கள் கடத்தியதாக பதிவான வழக்கில் 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கீழமை நீதிமன்றம் விசாரணையை 5 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது.புதுக்கோட்டை மேனிலைபட்டி மணிகண்டன், மேனன், கோவை முருகேசன். இவர்கள் கூரியர் மூலம் ஒரு திரவ நிலையிலான 620 கிராம் போதைப் பொருட்களை கடத்தியதாக மதுரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்


மதுரை : கூரியர் மூலம் போதைப் பொருட்கள் கடத்தியதாக பதிவான வழக்கில் 3 பேரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, கீழமை நீதிமன்றம் விசாரணையை 5 மாதங்களில் முடிக்க உத்தரவிட்டது.புதுக்கோட்டை மேனிலைபட்டி மணிகண்டன், மேனன், கோவை முருகேசன். இவர்கள் கூரியர் மூலம் ஒரு திரவ நிலையிலான 620 கிராம் போதைப் பொருட்களை கடத்தியதாக மதுரை போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசார் 2021 ல் வழக்குப் பதிந்தனர்.

மணிகண்டன் உட்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் ஜாமின் அனுமதிக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர்.நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார்.மனுதாரர்கள் தரப்பு: சம்பவத்திற்கும் மனுதாரர்களுக்கும் எந்த தொடர்பு இல்லை. முருகேசன் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் காசாளராக பணிபுரிந்தார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் சட்டவிரோதமானவை அல்ல. அது முருகேசனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அவர், நண்பர் என்ற முறையில் கூரியரை பெற்றுக் கொள்ளுமாறு மணிகண்டனிடம் தெரிவித்துள்ளார் என தெரிவித்தது.நீதிபதி: இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மணிகண்டன் மற்றும் மேனனின் அலைபேசி அழைப்பு விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. முருகேசனின் நெருங்கிய நண்பர் மணிகண்டன். கடத்தல் பொருட்கள் இருப்பதை அறிந்தே அதை மணிகண்டன் பெற்றுக்கொண்டார் என அரசு தரப்பு கூறுகிறது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. கீழமை நீதிமன்றம் விசாரணையை 5 மாதங்களில் முடிக்க வேண்டும். முடிக்காவிடில் மனுதாரர்கள் ஜாமின் மனு தாக்கல் செய்யலாம் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X