ஏரோ நாட்டிக்கல் படித்து கஞ்சா விற்ற பொறியாளர்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை ; மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏரோ நாட்டிக்கல் பொறியாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.சில நாட்களுக்கு முன் மதுரை மதிச்சியத்தில் 'கல்லுாரி மாணவர்கள்' என்றுக்கூறி வீடு எடுத்து கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பாலை பகுதியில் சிலர் கஞ்சா விற்றது தெரிந்தது. துணைகமிஷனர் மோகன்ராஜ் உத்தரவுபடி தல்லாகுளம்


மதுரை ; மதுரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஏரோ நாட்டிக்கல் பொறியாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.சில நாட்களுக்கு முன் மதுரை மதிச்சியத்தில் 'கல்லுாரி மாணவர்கள்' என்றுக்கூறி வீடு எடுத்து கஞ்சா விற்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பாலை பகுதியில் சிலர் கஞ்சா விற்றது தெரிந்தது. துணைகமிஷனர் மோகன்ராஜ் உத்தரவுபடி தல்லாகுளம் உதவிகமிஷனர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார், குறிப்பிட்ட வீட்டை சோதனையிட்டு 40 கிலோ கஞ்சா, பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர்.

பரசுராம்பட்டி டேவிட் என்ற மரியஆரோக்கியதாஸ் 25, கொடிக்குளம் அகஸ்டின் 23, கடச்சனேந்தல் ஷியாம்சுந்தர் 22, முருகானந்தம் 22, கோச்சடை விக்னேஷ் 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.இவர்களில் டேவிட் ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் முடித்தவர். இவரது தந்தை லாரி டிரைவர். அவருடன் அவ்வப்போது ஆந்திரா சென்றபோது சிலர் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது.

இதில் நல்ல வருவாய் கிடைப்பதை பார்த்து டேவிட்டும் கஞ்சா தொழிலை ஆரம்பித்தார். கூட்டாளிகள் மூலம் சில்லரை வியாபாரிகளுக்கு சப்ளை செய்துள்ளார்.இதேபோல் செல்லுார் வைகை வடகரை பகுதியில் 3.300 கிலோ கஞ்சாவுடன் கீழதோப்பு அய்யனார் 23, அஜீத் 22, வீரபிரபு 23, ஆகியோரை எஸ்.ஐ., ஜான் கைது செய்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X