லாரி உரிமையாளருக்குரூ.5,000 அபராதம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், காளப்பட்டி பகுதியில் ஆய்வு செய்வதற்காக, உதவி கமிஷனர் முத்து ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள், அவிநாசி ரோட்டில் அலுவலக வாகனத்தில் நேற்று சென்றனர்.முன்புறம் எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி, ரோட்டில் மண் சகதியை கொட்டியவாறு சென்றது. மழையும் பெய்துகொண்டிருந்ததால், சகதியால் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும்

கோவை:கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், காளப்பட்டி பகுதியில் ஆய்வு செய்வதற்காக, உதவி கமிஷனர் முத்து ராமலிங்கம், சுகாதார ஆய்வாளர் குணசேகரன் உள்ளிட்ட அதிகாரிகள், அவிநாசி ரோட்டில் அலுவலக வாகனத்தில் நேற்று சென்றனர்.முன்புறம் எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி, ரோட்டில் மண் சகதியை கொட்டியவாறு சென்றது. மழையும் பெய்துகொண்டிருந்ததால், சகதியால் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகும் நிலை உருவானது. அதனால், லாரி உரிமையாளருக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சுகாதார ஆய்வாளர் குணசேகரன் கூறுகையில், ''எம்.சாண்ட் ஏற்றிசென்ற லாரியில் இருந்து, அவிநாசி ரோடு முதல் காளப்பட்டி வரை சகதி விழுந்துகொண்டே சென்றது. லாரியை காளப்பட்டி ரோட்டில் தடுத்து, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. வரும் காலங்களில், மண் மீது வலை விரித்து கொண்டு வர லாரி டிரைவருக்கு அறிவுறுத்தி அனுப்பி வைக்கப்பட்டது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X