பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க திட்டம்; நிதி குறைவால் ஆர்வம் காட்டாத நகராட்சி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் ; ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய நகராட்சி ரூ.45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்தனர். ரூ.25 கோடியில் பணிகளை மேற்கொள்ள அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் பணியில் ஆர்வமின்றி ஒதுக்கீடு நிதியை பெறுவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் கிடப்பில் விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்



ராமநாதபுரம் ; ராமநாதபுரம் புதிய பஸ் ஸ்டாண்டை விரிவாக்கம் செய்ய நகராட்சி ரூ.45 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்தனர். ரூ.25 கோடியில் பணிகளை மேற்கொள்ள அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் பணியில் ஆர்வமின்றி ஒதுக்கீடு நிதியை பெறுவதற்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் கிடப்பில் விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ் ஸ்டாண்டில்இருந்து மதுரை, துாத்துக்குடி, கும்பகோணம், புதுக்கோட்டை பகுதிகளுக்கு 300க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது.

தினமும் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் பஸ்நிறுத்தும் பகுதிகளில் இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். மேலும் பஸ் நுழைவு, வெளியேறும் பகுதியில் ஆபத்தானமுறையில் காய்கறி, பழங்கள் விற்கின்றனர். பஸ் ஸ்டாண்ட் தரைத்தளம் பெயர்ந்து குண்டும்குழியுமாக உள்ளது. பிளாட்பார கடைகளின் கூரை பூச்சு பெயர்ந்து அடிக்கடி கீழே விழுகிறது. இதனையடுத்து, ரூ.45 கோடியில் பஸ் ஸ்டாண்டை செப்பனிட்டு, சந்தை திடல் வரை விரிவுபடுத்த நகராட்சி திட்டமிட்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

நகராட்சி நிர்வாகத்துறை ரூ.25கோடியில் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது. இதனால் பஸ் ஸ்டாண்டை விரிவுபடுத்தும் பணியில் ஆர்வமின்றி ஒதுக்கீடு நிதியை பெறுவதற்கானபணிகளை நகராட்சி நிர்வாகம் பலமாதங்களாக கிடப்பில் விட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. நகராட்சி பொறியாளர் சுரேந்திரன் கூறுகையில், 'பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க திட்டத்தை கிடப்பில்விடவில்லை. அதற்குஉரிய நிதியை விரைவில் பெறுவதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம்.புதிய திட்டமதிப்பீடுதயார் செய்துள்ளோம், ரூ.25 கோடியில் முதலில் பணிகளை மேற்கொண்டு, அதன்பிறகு கூடுதல் நிதியை பெறுவதற்கு முயற்சி செய்யப்படும்,' என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X