இலங்கை தீடையில் 13 அகதிகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ராமேஸ்வரம் ; இலங்கை அகதிகளை ஏமாற்றி பணம் பறித்து அந்நாட்டு மணல் தீடையில் இறக்கி விட்டு படகோட்டிகள் சென்றனர்.இவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு சென்றனர்.ஆக., 4 நள்ளிரவு இலங்கை மன்னார் கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்ட 13 அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கை படகோட்டிகள்,'தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடை இது தான்' என கூறி, இலங்கை கடல் எல்லையில் உள்ள



ராமேஸ்வரம் ; இலங்கை அகதிகளை ஏமாற்றி பணம் பறித்து அந்நாட்டு மணல் தீடையில் இறக்கி விட்டு படகோட்டிகள் சென்றனர்.இவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டு சென்றனர்.ஆக., 4 நள்ளிரவு இலங்கை மன்னார் கடற்கரையில் இருந்து கள்ளத்தனமாக படகில் புறப்பட்ட 13 அகதிகள் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர். இலங்கை படகோட்டிகள்,'தனுஷ்கோடி அருகே உள்ள மணல் தீடை இது தான்' என கூறி, இலங்கை கடல் எல்லையில் உள்ள மணல் தீடையில் இறக்கி விட்டு ஏமாற்றி சென்றுஉள்ளனர்.

இதற்கு படகு வாடகையாக சில லட்சம் ரூபாய் பெற்று கொண்டு படகோட்டிகள் மீண்டும்இலங்கை திரும்பி சென்றனர்.நேற்று காலை விடிந்ததும், இத்தீடை இலங்கை பகுதியில் உள்ளது என அகதிகளுக்கு தெரியவந்தது. தவித்த அகதிகளை காலை 10:00 மணிக்கு இலங்கை கடற்படையினர் மீட்டு சென்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X