கட்டுமான பணியை எளிதாக்கும் ரெடிமிக்ஸ் கான்கிரீட்| Dinamalar

கட்டுமான பணியை எளிதாக்கும் 'ரெடிமிக்ஸ்' கான்கிரீட்

Added : ஆக 06, 2022 | |
வீட்டு கட்டுமான பொருட்களில் முக்கியமானவை சிமென்ட், ஜல்லி, மண் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கட்டுமான பணியை மிக எளிதாக்கி விடுகிறது.கான்கிரீட் விரைந்து இறுகும்இந்த கலவை கட்டுமானம் நடக்கும் இடத்தில் தயாரிக்கப்படும். ஆனால் தற்போது இந்த கலவையை முன்பே தயாரித்து கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள்.வீட்டு கட்டுமான பொருட்களில் முக்கியமானவை சிமென்ட், ஜல்லி, மண் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ரெடிமிக்ஸ் கான்கிரீட் கட்டுமான பணியை மிக எளிதாக்கி விடுகிறது.


கான்கிரீட் விரைந்து இறுகும்இந்த கலவை கட்டுமானம் நடக்கும் இடத்தில் தயாரிக்கப்படும். ஆனால் தற்போது இந்த கலவையை முன்பே தயாரித்து கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு கொண்டு வந்து கொடுத்து விடுகிறார்கள். இதுதான் 'ரெடிமிக்ஸ்' கான்கிரீட். நெருக்கடியான இடத்தில் மனை வாங்கி வீடு கட்டும் போது கலவை தயாரிக்க இடம் கிடைக்காது. அதனால் ரெடி மிக்ஸ் கான்கிரீட் நல்ல மாற்றாக இருக்கும். ஏனென்றால் இது பயன்படுத்தகூடிய நிலையில் கிடைக்கும். தேவைக்கு ஏற்ப கான்கிரீட் வாங்கி பயன்படுத்தலாம்.ஜல்லி, மணல், சிமென்ட், நீர், வேதிப்பொருட்ள்கள் கொண்டு தான் ரெடி மிக்ஸ் கான்கிரீட் (ஆர்.எம்.சி) கான்கிரீட் தயாரிப்பர். மணலை பொறுத்தவரை இயற்கை, செயற்கை மணல் பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் இளகிய நிலையில் நீடித்திருக்க செய்வதற்கு வேதிப் பொருட்களை பயன்படுத்துகிறார்கள். எவ்வளவு நேரம்கழித்து கான்கிரீட் இறுக வேண்டும் என தீர்மானிக்கவும் பயன்படும்.

பலவித கலவை விகிதங்கள்
சிமென்ட்டுக்கு பதிலாக உலை கசடையும், எரிசாம்பலையும் பயன்படுத்தும் முறையும் உள்ளது. ஆர்.எம்.சி. தயாராகும், கட்டுமான பணி நடக்கும் இடத்துக்குமான இடைவெளி குறைவாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏனென்றால் கான்கிரீட் தயாராகி இரண்டரை மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்டால் அதன் தரம் பாதிக்க வாய்ப்புள்ளது.ரெடி மிக்ஸ் கான்கிரீட்யை பொருத்தவரை பலவித கலவை விகிதங்களில் கிடைக்கிறது. அதனால் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம். எந்த வேலைக்கு எந்த தரத்தில் கான்கிரீட் தேவையோ அதை பெற்று பயன்படுத்தலாம். ஒரே மாதிரி தரம் கொண்ட கான்கிரீட் தான் அனைத்து கட்டுமானத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை.


ஆர்.எம்.சி., விலை அதிகம்


ரெடி மிக்ஸ் கான்கிரீட் விரைவில் இறுகும் என்பதால் பணிகள் விரைந்து முடியும். ரெடி மிக்ஸ் கான்கிரீட் விலை சாதாரண கான்கிரீட்டை விட அதிகம். ஆனால், நேரம் மிச்சப்படுத்த அதற்குரிய விலையை நாம் தாராளமாக தரலாம். ரெடிமிக்ஸ் கான்கிரீட் தரத்தை எளிதில் அறிய கருவிகளும், முறைகளும் உள்ளன. பணியின் போது ஒலி, துாசு உருவாகாது. ஆர்.எம்.சி., கொண்டு வர போக்குவரத்து செலவு அதிகம். கட்டுமான இடத்தில் கான்கிரீட் தயாரிக்கும் போது பலருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஆர்.எம்.சி. இயந்திரம் தயாரிப்பதால் வேலை வாய்ப்பு குறையும். ரெடிமிக்ஸ் கான்கிரீட் கட்டடத்தில் விரைவில் விரிசல் ஏற்படும் என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X