கோவில்களில் வரலட்சுமி வழிபாடு பூஜைகள்| Dinamalar

கோவில்களில் வரலட்சுமி வழிபாடு பூஜைகள்

Added : ஆக 06, 2022 | |
மேட்டுப்பாளையம்:ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மேட்டுப்பாளையம் அடுத்த, ஊமப்பாளையத்தில் பன்மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, பவானி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடங்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். மதியம் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பின், அலங்கார
கோவில்களில் வரலட்சுமி வழிபாடு பூஜைகள்

மேட்டுப்பாளையம்:ஆடி மூன்றாம் வெள்ளி மற்றும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன.மேட்டுப்பாளையம் அடுத்த, ஊமப்பாளையத்தில் பன்மாகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு, பவானி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால் குடங்களை கோவிலுக்கு எடுத்து வந்தனர். மதியம் அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்த பின், அலங்கார பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பால் குடங்களை எடுத்து வந்தனர்.மேட்டுப்பாளையம் காட்டூரில், தவிட்டு மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு மூன்றாவது ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இது குறித்து பூசாரி லோகேஸ்வரன் கூறுகையில்,' அம்மனுக்கு, 12 ஆயிரம் வளையல்களில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.பக்தர்கள் குழுவினர் இரவு முழுவதும் வளையலை, நுாலில் கோர்த்தனர். காலையில் ஆறு மணிக்கு நடை திறந்த பின், சிறப்பு அபிஷேக பூஜை நடந்தது. அதைத் தொடர்ந்து இரண்டு மணி நேரம், அம்மனுக்கு வளையல்களில் அலங்காரம் செய்யப்பட்டது. வளையல் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்,' என்றார்.

பெ.நா.பாளையம்
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவில், கொங்காளம்மன் கோவில், மாகாளியம்மன் கோவில், சக்தி மாரியம்மன் கோவில், காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தண்டு மாரியம்மன் கோவில், வீரபாண்டி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில் சிறப்பு பூஜைகள், அபிஷேக ஆராதனைகள் நடந்தன. மேலும், அம்மன் கோவிலில் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, குங்குமம், மஞ்சள் கயிறு ஆகியவற்றை கோவில்களில் இறைவனை வழிபட வரும் பெண்களுக்கு வழங்கினர். நேற்று மாலை பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு திருவிளக்கு பூஜைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

அன்னுார்
பல நுாறு ஆண்டுகள் பழமையான அன்னுார் பெரியம்மன் கோவிலில், ஆடி மூன்றாவது வெள்ளியை முன்னிட்டு, நேற்று மதியம் அபிஷேக பூஜையும், இதையடுத்து, 1008 மலர்களால் அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.அன்னுார்- மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள சின்னம்மன் கோவில், மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில், உள்ள அருந்தவ செல்வி அம்மன், அன்னுார், தென்னம்பாளையம் ரோட்டில் உள்ள மாரியம்மன், எல்லப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவிலில், அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

சூலுார்
ஆடி மாத மூன்றாவது வெள்ளியான நேற்று, சூலுார் வட்டாரத்தில் உள்ள மங்களாம்பிகை அம்மன் கோவில், சூலுார் அங்காளம்மன், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்களில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. முத்துக்கவுண்டன் புதுார் மாகாளியம்மன் கோவிலில், அம்மன் மற்றும் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. இதேபோல், ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில், அரசூர் மாரியம்மன் கோவிலில் அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X