ஆன்லைன் வரி வசூல்: மாதிரி கிராமம் தேர்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
அன்னுார்:கிராம ஊராட்சிகளில், ஆன்லைனில் வரி செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில், கடந்த ஜூன் மாதம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு அந்த ஊராட்சியில் இருந்து ஊராட்சி செயலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக அன்னுார் ஒன்றியத்தில் ஆம்போதி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.இரண்டாம்

அன்னுார்:கிராம ஊராட்சிகளில், ஆன்லைனில் வரி செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவில்லை. தமிழகத்தில், கடந்த ஜூன் மாதம் ஒரு மாவட்டத்திற்கு ஒரு ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு அந்த ஊராட்சியில் இருந்து ஊராட்சி செயலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது. முதல் கட்டமாக அன்னுார் ஒன்றியத்தில் ஆம்போதி ஊராட்சி தேர்வு செய்யப்பட்டது.இரண்டாம் கட்டத்தில் தற்போது குப்பனுார் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் சொத்து வரி செலுத்துவோர், குடிநீர் இணைப்பு பெற்றோர், தொழில் செய்ய லைசென்ஸ் கட்டணம் செலுத்துவோர் ஆகியோருடைய விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகா, ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஊராட்சியின் அனைத்து வரி இனங்களையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை நேற்று மேற்கொண்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X