ராமநாதபுரம் : பட்டணம்காத்தான் அன்பு கார்டன் முதல் தெரு சமூக ஆர்வலர் விஜய பாஸ்கர் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் புகார் அளித்துள்ளார்.அவரது மனுவில் கூறியிருப்பது: ஊராட்சியில் பணப்பட்டுவாடா அனைத்தும் நிறுவனத்தின் பெயரில்வழங்கப்படாமல் இரு தனி நபர் பெயரில் மட்டுமே வழங்கப்பட்டுஉள்ளது.பாரதிநகர் மீன் மார்க்கெட்டில் 26 கடைகளுக்கு தலா ரூ.36 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை பெறப்பட்டுள்ளது.
அதற்கு ரசீது கொடுக்காமலும், அரசுக்கு செலுத்தாமல் நிதி இழப்பு செய்யப்பட்டுள்து. வீடுகளுக்கான வரைபட அனுமதியில் முறைகேடு நடக்கிறது. ஊராட்சி தெருவோர, சாலையோர கடைகளில் தினசரி வசூல் செய்யப்படுகிறது. இவற்றை முறையாக கணக்கில் கொண்டு வராததால் நிதி இழப்பு செய்யப்படுகிறது.ஊராட்சி அலுவலகத்தில்ஊராட்சி தலைவர் கணவர் இருந்து கொண்டு அனைத்து பணிகளையும் அவரது கட்டுப்பாட்டில் செயல்படுத்துகிறார்
என பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.கலெக்டர் ஜானி டாம் வர்கீஸிடம் கேட்ட போது, புகார் மனு அளித்துள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.பட்டணம்காத்தான் ஊராட்சி தலைவர் சித்ராவின் கணவர் மருதுபாண்டியனிடம் கேட்ட போது, இந்த புகார் உள்நோக்கம் கொண்டது. ஆதாரமற்றது.பத்தாண்டுகளுக்கும் மேலாக எங்கள் ஊராட்சி நிர்வாகம் மீது எந்த ஆடிட்டிங் தவறுகளும் கண்டறியப்படவில்லை, என்றார்.