இறைச்சி கழிவு கொட்டிய வாகனங்கள் சிறைபிடிப்பு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
அன்னுார்:அன்னுார் குளக்கரையில் இறைச்சி கழிவுகளை கொட்டிய, இருசக்கர வாகனங்களை மக்கள் சிறை பிடித்தனர்.அன்னுார் வார சந்தையின் மேற்குப் பகுதியில் குளக்கரை உள்ளது. நேற்று மதியம், இருசக்கர வாகனங்களில் வந்த இருவர், மாட்டு இறைச்சி கழிவுகளை குளக்கரையில் கொட்ட முயன்றனர். உடனே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இருசக்கர வாகனங்களை சிறை பிடித்தனர். பேரூராட்சி மற்றும் போலீசாருக்கு

அன்னுார்:அன்னுார் குளக்கரையில் இறைச்சி கழிவுகளை கொட்டிய, இருசக்கர வாகனங்களை மக்கள் சிறை பிடித்தனர்.அன்னுார் வார சந்தையின் மேற்குப் பகுதியில் குளக்கரை உள்ளது. நேற்று மதியம், இருசக்கர வாகனங்களில் வந்த இருவர், மாட்டு இறைச்சி கழிவுகளை குளக்கரையில் கொட்ட முயன்றனர். உடனே அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இருசக்கர வாகனங்களை சிறை பிடித்தனர்.
பேரூராட்சி மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சுகாதார ஆய்வாளர் இனியராஜ், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் அங்கு உடனடியாக ஆய்வு செய்தனர். அப்பகுதிகளில் இருந்த, மாட்டு இறைச்சிக் கடைகளை சுற்றி துாய்மையான முறையில் பராமரிக்காததால் ஏழு கடை உரிமையாளர்களுக்கும் தலா ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.இருசக்கர வாகனங்களில் ஆட்டு இறைச்சி கழிவுகளை கொண்டு வந்தவர்களை , 'அடுத்த முறை வந்தால் வாகனம் பறிமுதல் செய்யப்படும். போலீஸ் வாயிலாக வழக்கு பதிவு செய்யப்படும். அதிக தொகை அபராதம் விதிக்கப்படும்' என சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்து வாகனங்களை விடுவித்தனர்.இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், 'குளக்கரையில் மாட்டு இறைச்சி கழிவுகளை கொட்டுவதால் வார சந்தை நாட்களில் சந்தையில் பொருட்கள் வாங்க முடிவதில்லை. இதற்கு பேரூராட்சி நிரந்தர தீர்வு காண வேண்டும்,' என்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X