பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம்:பில்லுார் அணை நிரம்பி வழிந்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளுக்குள், தண்ணீர் வராமல் இருக்க, மணல் மூட்டைகள் நேற்று அடுக்கிவைக்கப்பட்டது.கோவை மாவட்டம், காரமடை வனப்பகுதியில், பில்லுார் அணை கட்டப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம்

மேட்டுப்பாளையம்:பில்லுார் அணை நிரம்பி வழிந்ததை அடுத்து, பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளுக்குள், தண்ணீர் வராமல் இருக்க, மணல் மூட்டைகள் நேற்று அடுக்கிவைக்கப்பட்டது.கோவை மாவட்டம், காரமடை வனப்பகுதியில், பில்லுார் அணை கட்டப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை அடுத்து, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில், கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்ததால், அணை நிரம்பி வழிகிறது.பில்லுார் அணைக்கு அதிகபட்சமாக வினாடிக்கு,16 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. அணை நிரம்பி வழிந்ததால், வருகின்ற தண்ணீர் முழுவதையும், அப்படியே அணையின் நான்கு மதகுகள் மற்றும் மின்சார உற்பத்தி செய்யவும், திறந்து விடப்படுகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆலாங்கொம்பு கிராமத்தின் ஒருபகுதி, பவானி ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் அமைந்துள்ளது.ஆற்றில் வெள்ளம் அதிகமாக வந்தால், குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகாமல் தடுக்க, ஊராட்சியின் சார்பில் ஆற்றின் கரையோரம், மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.மேட்டுப்பாளையம் தாசில்தார் மாலதி, ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மணல் மூட்டைகள் அடுக்கிய பகுதிகளை ஆய்வு செய்தனர்.

தண்ணீரில் தத்தளித்த இருவர் மீட்பு
பவானி ஆற்று வெள்ளத்தில் தத்தளித்த இருவரை, தீயணைப்பு துறையினர் மீட்டனர்.பில்லுார் அணை நிரம்பி வழிந்ததை அடுத்து, அணையிலிருந்து, 16,000 கன அடி தண்ணீர் ஆற்றில் திறந்து விட்டனர். ஆற்றில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. இந்நிலையில் காரமடை அண்ணா நகரை சேர்ந்த பிரதீப், 23 மற்றும் காமராஜ் நகரை சேர்ந்த காயத்ரி, 21 ஆகிய இருவர், நேற்று காலை, 11:30 மணிக்கு இருவரும் நெல்லித்துறை அடுத்த, விளாமரத்துாரில் பவானி ஆற்றை கடந்து, ஆற்றின் மையப்பகுதியில் உள்ள காலி இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் வந்ததால், அவர்கள் கரைக்கு வர முடியாமல் தவித்தனர். இதைப்பார்த்த, தேக்கம்பட்டி குடிநீர் திட்ட பம்ப் ஆப்ரேட்டர், போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.மேட்டுப்பாளையம் போலீஸ் தீயணைப்பு துறை அலுவலர் பாலசுந்தரம் தலைமையில் தீயணைப்பு குழுவினர், தாசில்தார் மாலதி, இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் ஆகியோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X