மூதாட்டி கொலை: நகைகள் கொள்ளை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
சூலுார்;சூலூர் அருகே மூதாட்டியை கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மாவட்டம், சூலுார் அடுத்த சிந்தாமணிப்புதூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜினி, 82; தனியாக வசித்து வந்தார். இரு மகன்கள், ஒரு மகள், வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.நேற்று காலை சரோஜினி வீட்டு கதவு, நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால், அருகில் வசிப்போர்,

சூலுார்;சூலூர் அருகே மூதாட்டியை கொலை செய்து, நகையை கொள்ளையடித்து சென்றவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை மாவட்டம், சூலுார் அடுத்த சிந்தாமணிப்புதூர், காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சரோஜினி, 82; தனியாக வசித்து வந்தார். இரு மகன்கள், ஒரு மகள், வெவ்வேறு இடங்களில் வசிக்கின்றனர்.நேற்று காலை சரோஜினி வீட்டு கதவு, நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்ததால், அருகில் வசிப்போர், கதவை திறந்து பார்த்துள்ளனர்.அங்கு, கை, வாய், கால்கள் 'பேக்கிங் டேப்பால்' சுற்றப்பட்டு மூதாட்டி கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த சூலுார் இன்ஸ்பெக்டர் மாதையன், எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் மற்றும் போலீசார், அங்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், மூதாட்டி அணிந்திருந்த நான்கு சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிந்தது. தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X