ரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரசார் 10 பெண்கள் உட்பட 34 பேர் கைது

Added : ஆக 06, 2022 | |
Advertisement
விருதுநகர், : விருதுநகரில் பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரசார் 10 பெண்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.தேசபந்து மைதானத்தில் இருந்து கச்சேரி ரோடு வழியாக ஊர்வலமாக விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வரை மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு வந்தனர். பின்னர் ரயில் மறியல் செய்ய ஸ்டேஷனுள் நுழைய முயன்றனர். அவர்களை



விருதுநகர், : விருதுநகரில் பெட்ரோல், டீசல், காஸ் விலையை உயர்த்திய மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரசார் 10 பெண்கள் உட்பட 34 பேர் கைது செய்யப்பட்டனர்.தேசபந்து மைதானத்தில் இருந்து கச்சேரி ரோடு வழியாக ஊர்வலமாக விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் வரை மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டு வந்தனர். பின்னர் ரயில் மறியல் செய்ய ஸ்டேஷனுள் நுழைய முயன்றனர்.

அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.போராட்டத்திற்கு நகர காங்., தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் பாண்டியன் கிராம வங்கி இயக்குனர் பாலகிருஷ்ணசாமி, காங்., ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுருநாதன், வெயிலுமுத்து நகர, வட்டார காங்., உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையம் முன்பு மாவட்ட தலைவர் ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று காலை 11:00 மணிக்கு பஸ் மறியலில் ஈடுபட்டனர். நகர தலைவர் வன்னியராஜ் முன்னிலை வகித்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் டவுண் போலீசார் கைது செய்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X