இன்றைய கிரைம் ரவுண்ட் அப்: ஐந்தாவது மாடியிலிருந்து குழந்தையை வீசிய பெண்

Updated : ஆக 06, 2022 | Added : ஆக 06, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
இந்திய நிகழ்வுகள் ஐந்தாவது மாடியிலிருந்து குழந்தையை வீசிய பெண்புதுடில்லி-பெங்களூரில் ஐந்தாவது மாடியிலிருந்து குழந்தையை துாக்கி வீசியதுடன், தற்கொலைக்கும் முயன்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு
Crime, Murder, Police, Theft,


இந்திய நிகழ்வுகள்
ஐந்தாவது மாடியிலிருந்து குழந்தையை வீசிய பெண்புதுடில்லி-பெங்களூரில் ஐந்தாவது மாடியிலிருந்து குழந்தையை துாக்கி வீசியதுடன், தற்கொலைக்கும் முயன்ற பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஒரு 'வீடியோ' வெளியாகி உள்ளது. அதில், ஒரு பெண், தன் குழந்தையுடன் ஐந்தாவது மாடியில் உள்ள பால்கனிக்கு தயங்கி தயங்கி வருகிறார். பின், அந்த குழந்தையை கீழே துாக்கி வீசுகிறார். சிறிது நேரத்தில் அந்த பெண்ணும் கீழே குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார். பக்கத்து வீட்டில் உள்ள சிலர், கடைசி நேரத்தில் அந்த பெண்ணை பிடித்து இழுத்து காப்பாற்றுகின்றனர். இதற்கிடையே, கீழே வீசப்பட்ட அந்த குழந்தை இறந்து விட்டதாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பெண்ணின் விபரங்கள், சம்பவம் நடந்த இடம், நாள் ஆகியவை வெளியிடப்படவில்லை.


ரூ.44 லட்சம் கொள்ளை குஜராத்தில் நால்வர் கைதுஆமதாபாத்-குஜராத்தில், பொதுத்துறை வங்கியில் நுழைந்த ஐந்து கொள்ளையர், துப்பாக்கியை காட்டி மிரட்டி, 44 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதில் நால்வர் பிடிபட்டனர்.குஜராத்தின் பாருச் மாவட்டம் அங்க்லேஷ்வர் என்ற இடத்தில் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் கிளை உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் காலையில் வாடிக்கையாளர்களை போல வந்த ஐந்து பேர், திடீரென துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் மிரட்டினர்.பின், வங்கியில் இருந்த 44 லட்சம் ரூபாயை எடுத்து தப்பினர். கொள்ளையர்களை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில், கொள்ளையர்களில் ஒருவர் காயம் அடைந்தார். அவரை கைது செய்த போலீசார், 22 லட்சம் ரூபாயை மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், தொழிற்சாலை பகுதியில் பதுங்கி இருந்த மேலும் மூன்று கொள்ளையர்களை, போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. ஐந்தாவது கொள்ளையனை தேடி வருகின்றனர். கொள்ளையர் அனைவரும் பீஹாரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.


தமிழக நிகழ்வுகள்
கந்து வட்டி: இரு பெண்கள் கைதுசெந்துறை : -செந்துறை அருகே மணக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் நல்லபிச்சை, விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகா 35, பழனியம்மாள் 37, ஆகியோரிடம் செல்வி கடந்த ஆறு மாதத்திற்கு முன் ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் கடன் வாங்கினார். வார தவணையில் செல்வி தொடர்ந்து பணம் கட்டியதாகவும், ஆனால் தற்போது கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதுடன், பணத்திற்கு பதிலாக வீட்டை எழுதி கேட்பதாக செல்வி நத்தம் போலீசில் புகார் அளித்தார். கார்த்திகா, பழனியம்மாளை போலீசார் கைது செய்தனர்.


400 ஆண்டுகள் பழமையான உலோக பெண் சிலை மீட்பு


சென்னை-துாத்துக்குடியில், 400 ஆண்டுகள் பழைமையான பெண் உலோகச் சிலையை, 2.30 கோடி ரூபாய்க்கு விற்க முயன்ற நான்கு பேரை, போலீசார் கைது செய்துள்ளனர்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகராஜ், 56. அதே மாவட்டம், இடைச்சி விளையைச் சேர்ந்தவர் குமரவேல், 32. இவர்கள், பழைமையான சிலைகளை விற்க முயற்சி செய்து வருவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி., ஜெயந்த் முரளிக்கு தகவல் கிடைத்தது.

2.30 கோடி ரூபாய்

இதையடுத்து, ஐ.ஜி., தினகரன் தலைமையிலான போலீசார், ஆறுமுகராஜ் மற்றும் குமரவேல் ஆகியோரின் நடவடிக்கைகளை கண்காணித்தனர். இவர்களிடம் சிலைகள் இருப்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, சிலை வியாபாரிகள் போல பேசி நம்ப வைத்தனர். சிலைக்கு, 2.30 கோடி ரூபாய் விலை பேசப்பட்டது.இருவரும் சிலையை, திருச்சி மாவட்டம், உறையூர், மேட்டுத்தெருவைச் சேர்ந்த முஸ்தபா, 32, என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், அவர் சிலைகளை விற்கும் புரோக்கர் என்றும், போலீசாரிடம் தெரிவித்தனர். பின் மூவரும் சிலையை, திருச்சி மாவட்டம், கிராப்பட்டி பிரிவு சாலை பகுதிக்கு எடுத்து வருவதாக ஒப்புக் கொண்டனர்.அதன்படி, சிலையை நேற்று எடுத்து வந்தபோது, மூவரையும் போலீசார் சுற்றி வளைத்தனர்.

இவர்களிடம் இருந்து, 1 அடி உயரமுள்ள உலோகத்திலான பெண் சிலையை கைப்பற்றினர். தொடர் விசாரணையில், 400 ஆண்டுகள் பழைமையான இச்சிலையை, சிவகங்கை மாவட்டம், கிளாமடந்தையைச் சேர்ந்த செல்வகுமார், 48, என்பவர் கொடுத்தார். இந்த சிலையை, 2.30 கோடி ரூபாய்க்கு விற்று பிரித்துக் கொள்ளலாம் என்றதாக, போலீசாரிடம் ஆறுமுகராஜ் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, செல்வகுமாரை பிடித்து போலீசார் விசாரித்தனர். இவர், 'என் தந்தை நாகராஜன், குறி சொல்பவர். 13 ஆண்டுகளுக்கு முன், சிவகங்கையைச் சேர்ந்த கருவாட்டு வியாபாரி ஒருவரின் வீட்டிற்கு, என் தந்தை குறி சொல்லச் சென்றார். 'அப்போது, அந்த வியாபாரியின் தென்னந்தோப்பில் இந்த சிலை இருந்துள்ளது. என் தந்தை வாங்கி வந்து சாமி கும்பிட்டு வந்தார். என் தந்தை இறந்த பின், சிலையை விற்க முடிவு செய்தேன்' என, கூறியுள்ளார். இதையடுத்து, நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணை

ஜெயந்த் முரளி கூறியதாவது:தொல்லியல் துறை நிபுணர்களின் ஆய்வின்படி, இச்சிலை சிவகங்கை பகுதியை ஆண்ட சேதுபதி அரச வம்சத்து பெண் சிலை என, தெரிய வந்துள்ளது. இச்சிலையின் ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் அரச வம்சத்து பெண் என்பதை உறுதி செய்கிறது. தொல்லியல் துறை மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் தமிழகத்தின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்ள, இச்சிலை உதவியாக இருக்கும். இந்த சிலை எங்கிருந்து திருடப்பட்டது, இதன் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து, விசாரித்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsகழுத்து நெரித்து பெண் கொலை?ரூ.10 லட்சம், 10 சவரன் மாயம்திருப்பூர்:திருப்பூரில், மர்மமான முறையில் மூதாட்டி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். வீட்டில் இருந்த 10 லட்சம் ரூபாய் ரொக்கம், பத்து சவரன் மாயமாகியிருந்ததாக கணவர் புகார் அளித்துள்ளார்.திருப்பூர், வேலம்பாளையம் அடுத்த சோளிபாளையம், ஸ்ரீனிவாசா நகரை சேர்ந்தவர் கோபாலன், 65. இவரது மனைவி முத்துலட்சுமி, 60. தம்பதிக்கு, இரண்டு மகன்கள். திருமணமாகி அருகே வசித்து வருகின்றனர்.கோபாலன், குமார் நகர், 60 அடி ரோட்டில் பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். இரண்டு மாடியில், 10 வீடுகளை வாடகைக்கு விட்டுள்ளார். தரைத்தளத்தில் தம்பதி மட்டும் வசித்து வருகின்றனர்.நேற்று மதியம், கோபாலன் வீட்டுக்கு வந்து விட்டு பனியன் நிறுவனத்துக்கு சென்றார். மாலையில் வீடு திரும்பிய போது, கதவு திறக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது, முத்துலட்சுமி துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார்.அந்த அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்தது. அந்த அறை, வீட்டுக்கு வெளியே மிளகாய் பொடி துாவப்பட்டு இருந்தது.போலீஸ் கமிஷனர் பிரபாகரன், துணை கமிஷனர் அபினவ்குமார் அங்கு சென்று விசாரித்தனர். முத்துலட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து துாக்கில் தொங்க விட்டு, நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றனரா என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.பீரோவில் இருந்த10 லட்சம் ரூபாய் ரொக்கம், பத்து சவரன் நகை காணாமல் போனதாக, கணவர் கோபாலன் புகார் கொடுத்துள்ளார். 'முத்துலட்சுமி இறந்தது எப்படி என்பது பிரேத பரிசோதனையில்தான் தெரியவரும்' என்கின்றனர் போலீசார்.


கஞ்சா விற்றவர்கள் கைது


திருப்பூர்:தாராபுரம் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். இருவரை பிடித்து விசாரித்தனர்.தாராபுரம், வள்ளுவர் வீதியை சேர்ந்த முத்துபாண்டி, 18, குருநாதன், 39 என்பதும் இருவரும் கஞ்சா விற்றதும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.அதேபோல், ஊத்துக்குளி அருகே பல்லகவுண்டம்பாளையத்தில் தங்கி வேலை செய்து வந்த, ஒடிசாவை சேர்ந்த ரபிந்திர ஜெனா, 34 என்பவரை பிடித்து விசாரித்தனர். ஒடிசாவில் இருந்து விற்பனைக்காக கொண்டு வந்த, ஒரு கிலோ, 100 கிராம் கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிந்தது. அவரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


latest tamil newsகச்சநத்தம் 3 பேர் கொலை வழக்கு: 27 பேருக்கும் ஆயுள் தண்டனை :'வீடியோ கான்பிரன்சிங்'ல் நீதிபதி தீர்ப்பு


சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கருப்பர் கோயில் விழாவில் 2018 ல் முதல் மரியாதை பெறும் பிரச்னையில் 3 பேரை கொலை செய்த வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை, ரூ.13.28 லட்சம் அபராதம் விதித்து மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட தனி நீதிபதி ஜி.முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.

கச்சநத்தம் கருப்பர் கோயில் விழா 2018 மே 25 நடந்தது. முதல் மரியாதையை யார் பெறுவதில் இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில் மே 28 இரவு 9:00 மணிக்கு ஒரு தரப்பினர் ஆயுதங்களுடன் கச்சநத்தத்தில் புகுந்து வீடுகளை சேதப்படுத்தியதுடன், அங்கிருந்தவர்களை அரிவாளால் வெட்டினர்.

இதில் சண்முகநாதன் 31, ஆறுமுகம் 65, சந்திரசேகர் 34, பலியாகினர். சுகுமாறன் 23, மலைச்சாமி 50, தனசேகரன் 32, மகேஸ்வரன் 18, தெய்வேந்திரன் 46, காயமுற்றனர். இதில் தனசேகரன் 2020 ஜன., 16 ல் இறந்தார்.

33 பேர் மீது வழக்கு பதிவு

மகேஸ்வரன் புகாரில் பழையனுார் போலீசார் கச்சநத்தம் சுமன் 23, அருண்குமார் 21, சந்திரகுமார் 47, அக்னி (எ) அக்கினிராஜ் 20, மாரநாடு ராஜேஷ்கண்ணன் 22, ஆவரங்காடு இளையராஜா 23, சுனித்குமார் 19, கருப்புராஜா (எ) முனியாண்டி சாமி 29, மைக்கேல் முனியாண்டி 30, ஒட்டக்குளத்தான் (எ)முனியாண்டி 40, ராமகிருஷ்ணன் 19, மீனாட்சி 40, செல்வி 37, கருப்பையா 29, சுரேஷ்குமார் 39, சின்னு 67, செல்லம்மாள் 65, முத்தையா 60, முத்துச்செல்வம் 20, முத்தீஸ்வரன் 25, ராமச்சந்திரன் 38, மாயசாமி 31, சுள்ளான் கருப்பையா 28, ரவி (எ) முகிலன் 23, ரவி 34, அருள்நவீன் 19, டவார்டு (எ) கார்த்திக் 19, மாத்துார் மட்டிவாயன் (எ) முத்துமணி 21, மற்றும் சிறார் 3 பேர் உட்பட 33 பேர் மீது வழக்கு பதிந்தனர்.

இவ்வழக்கில் தொடர்புடைய இருவர் இறந்து விட்டனர். சிறார் 3 பேர், தலைமறைவான சுள்ளான் கருப்பையா 28, ஆகிய 6 பேரை தவிர்த்து 27 பேர் மீதான விசாரணை சிவகங்கை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றத்தில் நடந்தது.பாதிக்கப்பட்டோர் தரப்பில் ஆஜராக சிறப்பு வழக்கறிஞர் பி.சின்னராஜாவை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நியமித்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஏ.துஷாந்த் பிரதீப்குமார் ஆஜரானார்.

வீடியோ கான்பிரன்சிங்கில் விசாரணை

வழக்கு விசாரணை ஜூலை 27 இறுதி முடிவுக்கு வந்தது. ஆக.,1ல் வழக்கில் 27 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி ஜி.முத்துக்குமரன் அறிவித்தார். தண்டனை ↔தொடர்ச்சி 6ம் பக்கம்விபரம் ஆக.,3 அறிவிப்பதாக கூறி ஒத்திவைத்தார்.

ஆக., 3 சிறையில் இருந்த குற்றவாளிகளிடம் 'வீடியோ கான்பிரன்சிங்' மூலம் பேசிய நீதிபதி தண்டனை உறுதி எனக்கூறி கருத்து கேட்டபின் ஆக., 5 தண்டனை விவரம் வெளியாகும் என்றார்.

* 27 பேருக்கு ஆயுள் தண்டனை:நேற்று காலை 11:30 மணிக்கு திருச்சி சிறையில் இருந்து ரவி (எ) முகிலன் 23, மட்டும் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டார். அவர் முன்னிலையில் 27 பேருக்கான தீர்ப்பை காலை 11:32 மணிக்கு நீதிபதி வாசிக்க துவங்கி மதியம் 12:05 மணிக்கு முடித்தார்.நீதிபதி தீர்ப்பில் 3 பேர் கொலை, வீடுகளை சூறையாடியது உட்பட ஒவ்வொருவர் மீதும் 10 பிரிவுகளின் கீழ் தண்டனையை பிரித்து அறிவித்தார். அதன்படி ஒரு குற்றவாளிக்கு தலா 7 ஆயுள் தண்டனை, 31 ஆண்டுகள், 3 மாத சிறை, அபராதம் ரூ.49,200 என அறிவித்து தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.


இத்தீர்ப்பை சிறையில் இருந்த மற்ற 26 பேரிடமும் 'வீடியோ கான்பிரன்சிங்' மூலமம் வாசித்தார். பின் நீதிபதி மற்றும் ஊழியர்கள், போலீசார் மதுரை சிறையில் தண்டனை நகலை வழங்கி குற்றவாளிகளிடம் கையெழுத்து பெற்றனர். எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் சிபிசாய் சவுந்தர்யன், கண்ணன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.நீதிபதிக்கு வந்த மர்ம தபால்சிறப்பு வழக்கறிஞர் பி.சின்னராஜா கூறியதாவது: நேற்று முன் தினம் ஜானகிராமன் என்பவர் அனுப்பிய பதிவு தபாலில் தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதியிடம் கூறியிருப்பது அதிருப்தி அளிக்கிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதெல்லாம் பிரச்னை செய்தனர். ஒருவர் நீதிமன்ற வளாகத்தில் தன் கழுத்தை அறுத்துக்கொண்டு மிரட்டல் விடுத்தார். மற்றொருவர் விசாரணை கூண்டில் ஏறி சாட்சி சொல்லக்கூடாது என நீதிபதி முன் மிரட்டினார் என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
06-ஆக-202214:02:05 IST Report Abuse
jayvee பெங்களூரு புது தில்லியில் இருக்கா ?
Rate this:
ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்
09-ஆக-202212:24:54 IST Report Abuse
ஸ்டிக்கன் 1அந்த பெண்மணி வடநாட்டை சேர்ந்தவர்...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
06-ஆக-202213:40:47 IST Report Abuse
Vena Suna தூக்கி எறியப்பட்ட குழந்தை பெண் .வயது ஐந்து.ஊமை.காதும் கேட்காது. பாதகி அம்மா செய்தால் கொலை.தற்கொலை போல நாடகம் ஆடினாள்
Rate this:
ஸ்டிக்கன் 1 - al-kyyar,பஹ்ரைன்
09-ஆக-202212:25:45 IST Report Abuse
ஸ்டிக்கன் 1ஆமாம் அந்த குழந்தையின் தந்தையால் இவ்ளோ நாலு அது உயிர் வாழ்ந்துள்ளது.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X