வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கண்காணிப்பு குழுவினர்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
அவனியாபுரம் : வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: தற்போது வெள்ள நிலவரங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. காவிரி, அதைச் சார்ந்த ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் கட்டுப்பாட்டில் உள்ளது. சில நாட்களாக 2 லட்சம் கன அடியாக இருந்த


அவனியாபுரம் : வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் கண்காணிப்பு குழுவினர் பணியில் ஈடுபட்டு வருவதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் தெரிவித்தார்.மதுரையில் அவர் கூறியதாவது: தற்போது வெள்ள நிலவரங்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. காவிரி, அதைச் சார்ந்த ஆறுகளில் இருந்து வரும் தண்ணீர் கட்டுப்பாட்டில் உள்ளது. சில நாட்களாக 2 லட்சம் கன அடியாக இருந்த காவிரி உபரி நீர், தற்போது ஒரு லட்சத்து 80 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.

அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தஞ்சை, மயிலாடுதுறை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 1327 குடும்பங்களைச் சேர்ந்த 4035 பேர் 49 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு அரசு சார்பில் உரிய வசதி செய்து தரப்படுகிறது. தவிர மாநில பேரிடர் மீட்பு படையிலிருந்து திருச்சி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல்லில் இருந்து 212 பேர் 6 மாவட்டங்களிலும், என்.டி.ஆர்.எப்., குழுவினர் 110 பேர் தயார் நிலையிலும் உள்ளனர்.காவிரி தண்ணீர் செல்லும் மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக்குழுவினர் வெள்ளம் மற்றும் மீட்பு பணியினை பார்வையிட்டு கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கர்நாடகாவிலிருந்து வரும் வெள்ளத்தை தடுத்து நிறுத்தும் அளவிற்கு தடுப்பணை கட்டும் திட்டம் தற்போதைக்கு அரசுக்கு இல்லை.

எதிர்காலத்தில் இதையெல்லாம் மனதில் வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது குடியிருப்பு பிரச்னைகள் வருகிறது. அதை மனிதாபிமானத்தோடு கவனத்தில் வைத்து அவர்களை அப்புறப்படுத்தி ஆக்கிரமிப்பு இடங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. இவ்வாறு கூறினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X