ஊட்டியில் தொடரும் கனமழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

Added : ஆக 06, 2022 | |
Advertisement
ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், காற்றுடன் பெய்து வரும் மழையால், 11 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில், 200 மி.மீ., தேவாலா, 181 மி.மீ., நடுவட்டம், 152 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த மழையால், கல்லட்டி, எச்.பி.எப்., பைக்காரா, கிளன்மார்கன், ஊட்டி பெர்ன்ஹில், குளிச்சோலை,
ஊட்டியில் தொடரும் கனமழை: அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஊட்டி;நீலகிரி மாவட்டத்தில், காற்றுடன் பெய்து வரும் மழையால், 11 இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.நீலகிரியில், நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அவலாஞ்சியில், 200 மி.மீ., தேவாலா, 181 மி.மீ., நடுவட்டம், 152 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த மழையால், கல்லட்டி, எச்.பி.எப்., பைக்காரா, கிளன்மார்கன், ஊட்டி பெர்ன்ஹில், குளிச்சோலை, கோரக்குந்தா, அவலாஞ்சி, அப்பர்பவானி உட்பட பகுதிகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தலைகுந்தாவில் மரம் விழுந்து பசு பலியானது. தீயணைப்பு, நெடுஞ்சாலை, வருவாய் துறையினர் மரத்தை அகற்றினர்.மாவட்டத்தில் மின் உற்பத்திக்காக, 13 அணைகள், 30 தடுப்பணைகள் உள்ளன. கடந்த மூன்று நாட்கள் பெய்த மழைக்கு, நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வரத்து அதிகரித்து, வினாடிக்கு, 300 கன அடி முதல் 400 கனஅடி வரை நீர் வருகிறது. குந்தா, கெத்தை, மாயார், கிளன்மார்கன் அணைகள் முழு கொள்ளளவை எட்டின. பிற அணைகளில், 80 சதவீதம் அளவுக்கு நீர் நிரம்பியுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X