மூன்றாவது ஆடிவெள்ளி சிறப்பு அலங்கார பூஜை

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உடுமலை:ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரத தினத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு செலுத்தி, மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டி, கூழ் ஊற்றி, திருவிளக்கு பூஜை

உடுமலை:ஆடிவெள்ளி மற்றும் வரலட்சுமி விரத தினத்தையொட்டி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.அம்மனுக்கு உகந்ததாக கருதப்படும் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில், அனைத்து கோவில்களிலும், சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. புண்ணிய தலங்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, அம்மனுக்கு செலுத்தி, மாவிலை, வேப்பிலை தோரணம் கட்டி, கூழ் ஊற்றி, திருவிளக்கு பூஜை நடத்தி ஆடிவெள்ளியை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.அவ்வகையில், நேற்று உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில், காலை முதல் சிறப்பு பூஜைகள் நடந்தது. உச்சிப்பூஜையில், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன்களை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும், வெள்ளிக்கிழமையன்று, வரலட்சுமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. நேற்று, இவ்விரதம் இருந்த பெண்கள், கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர். அவர்களுக்கு மஞ்சள் கயிறு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X