மாவட்டத்தில் நாளை மெகா தடுப்பூசி முகாம்: விரிவான ஏற்பாடுகள்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் நாளை, 33 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுதும், 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி, 32வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அதில், 20 ஆயிரத்து, 666 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்நிலையில், 33ம் கட்ட மெகா தடுப்பூசி

உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் நாளை, 33 ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. மாவட்டம் முழுதும், 1,341 இடங்களில் தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை மூலம் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஜூலை 24ம் தேதி, 32வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. அதில், 20 ஆயிரத்து, 666 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. இந்நிலையில், 33ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நாளை (7ம் தேதி) மாவட்டத்தின், 1,341 இடங்களில் நடக்கிறது.கலெக்டர் வினீத் அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், 12 முதல், 14 வயது வரை, 15 முதல், 18 வயது வரை இளம்சிறார்கள் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும், 33ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம், நாளை நடக்கிறது.திருப்பூர் மாவட்டத்தில், 18 வயதுக்கும் மேற்பட்ட, 98.80 சதவீதம் பேர் முதல் தவணையும், 77.73 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 15 முதல், 18 வயது பிரிவில், 88.42 சதவீதம் பேர் முதல் தவணையும், 74.73 சதவீதம் பேர் இரண்டாம் தவணையும், 12 முதல், 14 வயது பிரிவில், 89.56 சதவீதம் பேர் முதல் தவணையும், 64.81 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தியுள்ளனர்.இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி ஆறு மாதம் அல்லது, 26 வாரம் கடந்த 18 வயதுக்கு மேற்பட்டவர் அனைவருக்கும் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி இம்முகாமில் செலுத்தப்படும்.பூஸ்டர் தடுப்பூசி, செப்., 30ம் தேதி வரை மட்டுமே இலவசமாக அனைவருக்கும் செலுத்தப்படும்.மாவட்டத்தில் ஒரு நபர் கூட விடுபடாமல் கிராமங்களிலும், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சியில் இத்தடுப்பூசி கிடைத்திட, தேவையான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.அரசு மருத்துவக்கல்லுாரி, தலைமை அரசு மருத்துவமனை, மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், ஊட்டச்சத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், ஊராட்சி அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட மாவட்டத்தின், 1,341 இடங்களில் முகாம் நடக்கிறது.பல்வேறு துறைகளைச்சேர்ந்த, 2,681 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட உள்ளனர்.அனைத்து பகுதியிலும் முகாம்களில், காலை 7:00 மணி முதல், இரவு, 7:00 வரை தடுப்பூசி செலுத்தப்படும். இந்த நல்வாய்ப்பினை இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X