தேனியில் இன்று தினமலர் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி

Added : ஆக 06, 2022 | |
Advertisement
மதுரை : இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்கும் தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சிஇன்று (ஆக.,6)தேனியில் அன்னப்பராஜா கல்யாண மஹாலில் காலை 10:00முதல் மதியம் 1:00 மணி வரைநடக்கிறது.நாளை (ஆக.,7)சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் காலை 10:00


மதுரை : இன்ஜினியரிங் கவுன்சிலிங் குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் அனைத்து சந்தேகங்களுக்கும் நிபுணர்கள் நேரடி விளக்கம் அளிக்கும் தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சிஇன்று (ஆக.,6)தேனியில் அன்னப்பராஜா கல்யாண மஹாலில் காலை 10:00முதல் மதியம் 1:00 மணி வரைநடக்கிறது.

நாளை (ஆக.,7)சிவகாசி எஸ்.எப்.ஆர்., மகளிர் கல்லுாரியில் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.மதுரை பசுமலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் மதியம் 3:00முதல் மாலை 6:00 மணி வரை நடக்கிறது.பிளஸ் 2 முடித்து இன்ஜினியரிங் படிப்பு கனவில் உள்ள மாணவர்கள் நலன் கருதி அவர்கள் எளிதாக கவுன்சிலிங்கில் பங்கேற்று, சிறந்த கல்லுாரி, பாடப் பிரிவுகளை தேர்வு செய்வது எவ்வாறு என்பது உள்ளிட்ட சந்தேகங்களை தீர்த்து வைக்கும் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி தினமலர் சார்பில்ஆண்டுதோறும்நடத்தப்படுகிறது.இந்தாண்டு, தமிழகத்தில் இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் ஆக. 22ல் துவங்கவுள்ளது.மாணவர்கள், பெற்றோர் ஆர்வத்துடன் எதிர்பார்த்த 'உங்களால் முடியும்' நிகழ்ச்சிஇன்று தேனியில் நடக்கிறது.இதில் மாணவர்கள் பெற்ற 'கட் ஆப்' மதிப்பெண்ணின் முக்கியத்துவம், சிறந்த கல்லுாரிகள், பாடப் பிரிவுகளை எவ்வாறு தேர்வு செய்வது,

எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு தரும் பாடப் பிரிவுகள் எவை என்பது உட்பட மாணவர்களின் அனைத்து சந்தேகங்களுக்கும் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி, கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் விளக்கம் அளிக்கின்றனர்.இதுதவிர 'சாய்ஸ் பில்லிங்' அறிந்துகொள்வதன் அவசியம், 'கம்யூனிட்டி ரேங்கிங்', பொது ரேங்கிங் வேறுபாடுகள், கவுன்சிலிங்கின் புதுமையான அம்சங்கள், கல்லுாரியில் எவ்வாறு சேர்க்கை பெறுதல் போன்ற நுணுக்கங்களையும் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி கற்றுத்தரவுள்ளது.

இதன் மூலம் விரல் நுனியில் விபரம் வைத்துக்கொண்டு தன்னம்பிக்கையுடன் கவுன்சிலிங்கில் பங்கேற்க தினமலர் ஏற்பாடு செய்துள்ளது.இந்நிகழ்ச்சியை தினமலர் கல்விமலர், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ் இணைந்து வழங்குகின்றன. அனுமதி இலவசம். தகவல்களுக்கு www.kalvimalar.comஐ பார்வையிடலாம். நிகழ்ச்சிக்கு வாருங்கள் மாணவர்களே, பயன்பெறுங்கள்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X