குறுமைய அளவிலான போட்டி முன்னேற்பாடு தீவிரம்

Added : ஆக 06, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை குறு மைய அளவிலான விளையாட்டுப்போட்டி, எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வாயிலாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆறு குறு மைய அளவில் குழு போட்டிகள், தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டில்

உடுமலை:உடுமலை குறு மைய அளவிலான விளையாட்டுப்போட்டி, எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி வாயிலாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.திருப்பூர் மாவட்டத்திற்குட்பட்ட ஆறு குறு மைய அளவில் குழு போட்டிகள், தடகள போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. அனைத்து அரசு, உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, மெட்ரிக், நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டில் திறமையான மாணவர்கள் பங்கேற்கலாம்.
மேலும், 14 வயது, 17 வயது, 19 வயது என, மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகிறது. பிறப்புச்சான்றிதழ், ஆதார் எண், 19 வயது எனில் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் மிக அவசியம். நுழைவு படிவம் அந்தந்த பள்ளிகளுக்கு இ-மெயில் வாயிலாக, அனுப்பப்பட்டுள்ளன. ஒரு மாணவர் ஏதேனும் ஒரு வயது பிரிவில் மட்டுமே பங்கேற்ற முடியும். 11 வயதுக்குட்பட்ட தொடக்க பள்ளி மாணவ, மாணவியர், சதுரங்க போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற முடியும்.திருப்பூர் தெற்கில் கோவில்வழியில் உள்ள அரசு ஆதி திராவிடர் நலத்துறை உயர்நிலைப்பள்ளியில், திருப்பூர் வடக்கில் காந்திநகரில் உள்ள ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசியில் எம்.எஸ்.வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பல்லடம் கோடங்கிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி, உடுமலை எலையமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி, தாராபுரத்தில் முத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X