காய்கறி உள்ளிட்ட விளைபொருள் விற்பனைக்கு...உழவர் மையம் அமையுமா? அண்டை மாநிலங்களை பின்பற்ற எதிர்பார்ப்பு| Dinamalar

காய்கறி உள்ளிட்ட விளைபொருள் விற்பனைக்கு...உழவர் மையம் அமையுமா? அண்டை மாநிலங்களை பின்பற்ற எதிர்பார்ப்பு

Added : ஆக 06, 2022 | கருத்துகள் (1) | |
உடுமலை:உடுமலை பகுதிகளில், தக்காளி, சின்னவெங்காயம், தேங்காய் உள்ளிட்ட காய்கறி சாகுபடி அதிகளவு உள்ள நிலையில், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பின்பற்றப்படும், 'ரைத்து பஜார்' எனப்படும், உழவர் மையங்களை ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக வர்த்தகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரத்தில், காய்கறி சாகுபடி பிரதானமாக
  காய்கறி உள்ளிட்ட விளைபொருள் விற்பனைக்கு...உழவர் மையம் அமையுமா? அண்டை மாநிலங்களை பின்பற்ற எதிர்பார்ப்பு

உடுமலை:உடுமலை பகுதிகளில், தக்காளி, சின்னவெங்காயம், தேங்காய் உள்ளிட்ட காய்கறி சாகுபடி அதிகளவு உள்ள நிலையில், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில், பின்பற்றப்படும், 'ரைத்து பஜார்' எனப்படும், உழவர் மையங்களை ஒழுங்கு முறை விற்பனை கூடம் வாயிலாக வர்த்தகம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரத்தில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. தக்காளி, சின்னவெங்காயம், கத்தரி, மிளகாய், பாவக்காய், பீர்க்கன் என பந்தல் காய்கறி சாகுபடியும் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.ஆண்டு முழுவதும் ஏறத்தாழ, 30 முதல், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது.
அதே போல், தென்னை சாகுபடியும் பிரதானமாக உள்ளது.உடுமலை பகுதிகளில் விளையும் காய்கறிகள், உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.சென்னை, மதுரை, திருச்சி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகள், காய்கறிகளை கொள்முதல் செய்து, லாரிகள் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

சந்தையில் இடநெருக்கடி
தினமும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் வரும், உடுமலை சந்தையில், இட நெருக்கடி நிரந்தரமாக உள்ளது. காய்கறிகள் இறக்கி வைக்கவும், வாகனங்கள் வந்து செல்லவும் முடியாமல் திணறும் சூழல் காணப்படுகிறது.இதனால், பொள்ளாச்சி ரோடு, பழநி ரோடு, ராஜேந்திரா ரோடுகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. விவசாய விளை பொருட்களுக்கும் உரிய விலை கிடைக்காததோடு, கமிஷன், சுங்க கட்டணம், போக்குவரத்து கட்டணம், பறிப்பு கூலி என நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலும், உடுமலை பகுதிகளில் காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், தேங்காய், இளநீர் மற்றும் காய்கறிகள் விற்பனைக்கு என தனி மையம் உருவாக்க வேண்டும்.

'ரைத்து பஜார்' அவசியம்
விவசாயிகள் கூறியதாவது: விவசாய விளை பொருட்களை, சில்லரை விற்பனைக்கு உழவர் சந்தைகள் உள்ளன. ஆனால், மொத்த விற்பனைக்கான வாய்ப்புகள் இல்லை. ஆந்திர மாநிலத்தில் 'ரைத்து பஜார்' என பெரிய அளவிலான மார்க்கெட்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்படுகிறது.அதே போல், கர்நாடகா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும், விவசாய விளை பொருட்களான, காய்கறிகள், பழ வகைகள் விற்பனைக்கு என பிரமாண்டமான மார்க்கெட்கள் உள்ளன.அதே போல், பெரிய அளவிலான மைதானம், வியாபாரிகளுக்கான கடைகள், குறைந்த பட்ச ஆதார விலைக்கு மேல் மட்டுமே கொள்முதல், உடனடி பணம் வழங்க வேண்டும், கமிஷன் இல்லை, வாகனங்கள் நிறுத்த வசதி, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் கலாசு தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் என அனைத்து வசதிகளுடன், இந்த மார்க்கெட்கள் அமைந்துள்ளன.
விவசாயிகள் கொண்டு வரும், விளை பொருட்கள் விற்பனையாகாமல் இருந்தாலோ, கூடுதல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க விவசாயிகள் விரும்பினால், பிரமாண்டமான, குளிர் பதனக்கிடங்கு வசதிகளும் இங்கு உள்ளன.இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, உள்ளூர் உற்பத்தி செலவினத்திற்கு ஏற்ப, தினமும் ஆதார விலை அதிகாரிகள் நிர்ணயிப்பதால், நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.தமிழகத்தில், தானியங்களுக்கு மட்டுமே, ஒழுங்கு முறை விற்பனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை கூடங்களை நிர்வகிக்கும், கமிட்டிகளிடம், நிதி ஆதாரமும் திருப்தியாக உள்ளதால், தமிழக அரசு, காய்கறி, பழங்களுக்கான மார்க்கெட்களும் அமைக்க வேண்டும்.இவ்வாறு, விவசாயிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X